headlines

img

இது உங்கள் தேர்தல் ஜூம்லா!

இது உங்கள் தேர்தல் ஜூம்லா

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, ஒரே நாடு, ஒரே வரி என்று கூறி ஜிஎஸ்டி யை மக்கள் மீது சுமத்தியது. ஆனால் ஒரே விகிதத்தில் அல்ல. 5, 12, 18, 28 சதவிகிதம் என நான்கு விகிதத்தில் வரிவிதித்து மக்களை கசக்கிப் பிழிந்து ஒன்றிய கஜானாவை நிரப்பியது. மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் நிராகரித்து, மாநி லங்களை இரவலர்களைப் போல இறைஞ்ச வைத் தது. ‘கோலொடு நின்றான் எடு’ என்பது போல நாட்டு மக்களை வாட்டி வதைத்தது ஜிஎஸ்டி.

அரிசிக்கும் ஜிஎஸ்டி. பத்திக்கும் சூடத்துக்கும் கூட வரி. இந்த ஜிஎஸ்டி அமலால் தொழில்துறை முடங்கியது. கட்டுமானத் தொழில் ஆட்டம் கண்டது. திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங் கள் பரிதாப நிலையில் மூச்சு திணறின. கடந்த பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளும் பொருளாதார நிபுணர்களும் வற்புறுத்திக் கூறிய போதெல்லாம் அலட்சியப்படுத்தியது மோடி அரசு. ஆனால் தற்போது 4 மாநில தேர்தல்கள் வருவதையொட்டி சிறிய மாற்றத்தை செய்துவிட்டு ஏதோ ஜிஎஸ்டி யையே முற்றாகக் கைவிட்டு விட்டது போல சேமிப்புத் திருவிழா என்று அரசு, ஊடகங்களில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.

மோடியும் அமைச்சர்களும் ஜிஎஸ்டி குறைப் பின் பலன் மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்று மிகவும் கரிசனமாகப் பேசுகிறார்கள். கார் விலை குறைகிறது. டிராக்டர் விலை குறை கிறது. டிவி விலை குறைகிறது. பிரிட்ஜ் விலை குறைகிறது... என நீட்டி முழக்கும் விளம்பரங்கள் செவிப்பறையைக் கிழிக்கின்றன. பிரதமர் மோடி, ரூ.1 லட்சம் செலவழிக்கும் குடும்பத்தில் ரூ.20 ஆயிரம் சேமிப்பு என்கிறார்.

பாஜக அரசு அதிகாரத்துக்காக அல்ல; சேவைக்காக உள்ளது என்கிறார் மோடி. அப்படி யானால் இத்தனை ஆண்டு காலம் ஜிஎஸ்டி யை குறைக்காமல் இருந்தது ஏன்? சேவைக் கா? அதிகாரத்துக்கா? கார்ப்பரேட் நண்பர்க ளின் நலனுக்கா? ஆர்எஸ்எஸ் அஜண்டா திணிப்புக்கா?

விலை மாற்றம் செய்யாதது குறித்து 3 ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித் துள்ளது, ஜிஎஸ்டி குறைப்பு மக்களைச் சென்று சேரவில்லை என்பதையே காட்டுகிறது. உண்மை யில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, உளுந்தம் பருப்பு உள்ளிட்டவற்றுக்கு வரிக் குறைப்பு ஏதும் செய்யாமல் இருப்பதை மறைப்பதற்கே இத்த கைய திசை திருப்பும் வேலைகளில் ஈடுபடு கிறது.

கேரள  முதல்வர் பினராயி விஜயன் சிமெண்ட் விலை குறையவில்லை என்பதையே அம்பலப் படுத்தினார். ஆனால் சிமெண்ட் விலை 40 ரூபாய் குறைய வேண்டும்; ஆனால் குறைய வில்லை என்று பிரதமரே ராஜஸ்தானில் போய் குறை கூறுகிறார். இந்த வரிக் குறைப்பு நாடகமும் தொடரும் வாய்ஜாலமும் நாட்டு மக்க ளுக்கு நலம் தராது. இது சேமிப்புத் திருவிழா அல்ல; உங்களது தேர்தல் கால ஜூம்லா (பசப்பல்)!