headlines

img

கரூர் துயரம்: அரசியல் பாடங்கள்

 கரூர் துயரம்: அரசியல் பாடங்கள்

கரூர் நெரிசலில் 40 உயிர்கள் பலியாகியுள்ள துயரச் சம்பவம் தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விபத்தின் மீதான எடப்பாடி பழனிசாமியின் கருத்துகள் அரசியல் ஆதாய நோக்கில் அமைந் துள்ளன. 40 உயிர்கள் பலியான துயர நேரத்தில் “போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை” என்று, அவசர கதியில் அரசை குறை கூறுவது சந்தர்ப்பவாதம். எதிர்க்கட்சி நிகழ்வுகளுக்கு பார பட்சம் நடப்பதாக குற்றம் சாட்டுவது அவரது அர சியல் வேலைத்திட்டத்தின் பகுதி. குறிப்பாக “மின் சாரம் பாயும் போது நெரிசல் ஏற்பட்டது” போன்ற  அவரது சந்தேகக் கருத்துகள் சதிக்கோட்பாடுக ளை வளர்ப்பதாக அமைகின்றன. “ஆம்புலன்ஸ் வந்தது சந்தேகம் எழுப்புகிறது” என்ற அவரது கூற்றும் நம்பகத்தன்மையற்றது.

ஆனால் அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மறுமொழி இதில் வேறு பரிமாணத்தை காட்டு கிறது. எடப்பாடி பழனிசாமி “பிணங்களின் மீது அரசியல்” செய்வதாக அவர் குற்றம்சாட்டுகிறார். இது தீவிரமான விமர்சனம். த.வெ.க தரப்பு நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை மிக தெளிவாக உண்மைகளை சுட்டிக்காட்டு கிறது. “இதுவரை அரசியல் பிரச்சாரத்தில் இந்த அளவு பெரும் உயிரிழப்பு நடந்ததில்லை” என்ற கட்சியின் கூற்று வரலாற்று உண்மை. விஜய் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் பாதிக்கப் பட்டோருக்கு எந்த உதவியும் செய்யாததை கடு மையாக கண்டனம் செய்திருப்பது சரியானது.

மிக கடுமையான விமர்சனத்திற்குரியது விஜய் யின் “ஓட்டம்”. தமது கட்சித் தொண்டர்களின் உயிர்கள் பலியாகும் சமயத்தில் மேடையில் பேசிக் கொண்டிருந்த அவர், விபத்து குறித்து அறிந்தும் எந்த உதவியும் செய்யாமல் உடனடியாக சென் னைக்கு ஓட்டம் பிடித்தது அவரது தலைமை யின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்து கிறது. அவரது கட்சி நிர்வாகிகள் கூட மருத்துவ மனைக்கு செல்லவில்லை என்பது மனசாட்சி யின்மையைக் காட்டுகிறது. உண்மை என்ன வென்றால், விஜய்யின் காலதாமதம், த.வெ.க-வின் கூட்ட மேலாண்மையில் அனுபவமின்மை, நீதிமன்ற நிபந்தனைகள் மீறல், பாதுகாப்பு ஏற் பாடுகளில் குறை - இவை அனைத்தும் சேர்ந்து இந்த பேரழிவுக்கு வழிவகுத்தன. சுமார் 30,000 பேர் நண்பகல் முதல் இரவு வரை உணவு, தண்ணீர் இன்றி காத்திருக்க வைத்தது மனிதாபிமான மற்றது.

இந்த பேரழிவின் மத்தியில் முதல்வர் ஸ்டாலி னின் செயல்பாடு பாராட்டுக்குரியது. இரவோடு இரவாக கரூர் சென்று பாதிக்கப்பட்டோரின் குடும் பங்களை சந்தித்தது, உடனடி நிவாரணம் அறி வித்தது, மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது அரசின் பொறுப்புணர்வைக் காட்டுகின்றன. 

அரசியல் கட்சிகள் இந்த துயரத்தை வாய்ப்பாக பயன்படுத்துவதற்கு பதிலாக, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் திட்ட வட்டமான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.