headlines

img

நிதி ஒதுக்கீட்டில் தொடரும் பாரபட்சம்

ஒன்றிய மோடி அரசின் நிதி ஒதுக்கீடு முறை,  இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் அடிப் படை நோக்கங்களை தொடர்ந்து மீறுவதாகவே அமைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமை யிலான கூட்டணி அரசு, வட இந்திய மாநி லங்களுக்கு, குறிப்பாக உத்தரப்பிரதேசத்திற்கு, அளவுக்கதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது. இது தென் மாநிலங்களின் வளர்ச்சியை பாதிக்கும் வகையிலும், பழி வாங்கும் விதத்திலும் அமைந்துள்ளது.

சமீபத்திய நிதி ஒதுக்கீட்டில், உத்தரப்பிர தேசத்திற்கு மட்டும் ரூ. 31,962 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.  இது தமிழ்நாடு, கேரளா, தெலுங்கா னா, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய ஐந்து தென் மாநிலங்களுக்கும் சேர்த்து  ஒதுக்கப்பட்ட மொத்த தொகையான ரூ. 28,152 கோடியை விட அதிகமாகும். இந்த ஐந்து மாநிலங்க ளின் மொத்த மக்கள்தொகை உத்தரப்பிரதேசத் தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதி ஒதுக்கீட்டு முறை, வடக்கு-தெற்கு இடையேயான பிளவை - பாரபட்சத்தை மேலும் ஆழப்படுத்துகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்க ளான உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் ஆகியவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தென் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்க ளை பாதிக்கும் என்பது தெளிவு.

இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சி தத்துவத்தின்படி, அனைத்து மாநிலங்களும் சம மாக நடத்தப்பட வேண்டும். ஆனால் மோடி அரசின் இந்த செயல்பாடு, சில மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக உள்ளது. இது நாட்டின் ஒற்றுமைக்கும், சமச்சீர் வளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கக்கூடியது.

தென் மாநிலங்கள் இந்தியாவின் பொருளா தார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றின் மனித வள மேம்பாடு, தொழில்மய மாக்கல் மற்றும் வருவாய் ஈட்டும் திறன் ஆகி யவை குறிப்பிடத்தக்கவை. இருப்பினும், தொ டர்ச்சியாக ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டில்அவற்றின் பங்களிப்பு சரியாக அங்கீகரிக்கப்படவில்லை. 

மாநில அரசுகளுக்கான ஜிஎஸ்டி பங்குத் தொகை, மாநிலத் திட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடுகள், பேரிடர் காலங்களில் மாநில அரசுகள் கேட்கும் நிவாரண உதவி உள்ளிட்ட எந்த நிதி ஒதுக்கீட்டிலும் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட பாஜக அல்லாத எதிர்க்கட்சி கள் ஆளும் மாநிலங்களுக்கு மோடி அரசு வஞ்ச கத்தையே பரிசாக அளிக்கிறது.

மோடி அரசின் இந்த பாரபட்சமான நிதி ஒதுக் கீடு முறை, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் அடிப்படை நோக்கங்களை மீறுவதோடு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கும். அனைத்து மாநிலங்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, நியாயமான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், இது நாட்டின் ஒற்றுமைக்கும், சமச்சீர் வளர்ச்சிக் கும் பெரும் சவாலாக அமையும்.