விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஒளி வீசும் சமூக நீதி!
சமூகத்தின் ஆகச்சிறந்த ஜனநாயகப் பண்பு என்பது, அந்தச் சமூகத்தால் ஒடுக்கப் பட்ட மற்றும் புறக்கணிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு அளிக்கப்படும் சம வாய்ப்பில்தான் அடங்கியிருக்கிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக் கையில் அறிவிக்கப்பட்டபடி, ஊர்க்காவல் படை யில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை இணைத்திருப்பது சமூக நீதியின் மற்றுமொரு மைல்கல்லாகும்.
இந்தியாவின் முதல் திருநங்கை காவல்துறை உதவி ஆய்வாளர் பிரித்திகா யாஷினி ஆவார், இவர் 2015-இல் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை ஆய்வாளர் பணிக்குத் தேர்ச்சி பெற்று, நீதிமன்றப் போராட் டங்களுக்குப் பிறகு 2017-ல் பணியில் சேர்ந்தார், இது திருநங்கைகளுக்கான வாய்ப்புகளைத் திறந்தது. கோவை மாநகர ஊர்க்காவல் படை யில் முதல்முறையாக ஏழு திருநங்கைகளும் திருநம்பிகளும் பணியில் இணைந்துள்ள செய்தி, காலம் காலமாக நிலவி வரும் பாலினப் பாகுபாட்டிற்கு எதிரான ஒரு வலுவான அறை கூவலாகும். உழைக்கும் வர்க்கத்தின் ஒரு பகுதி யினராக இருந்தும், பாலின அடையாளத்தால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, சமூகத்தின் விளிம் பிற்குத் தள்ளப்பட்ட இவர்களுக்கு, அரசுப் பணி யில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது வெறும் வேலைவாய்ப்பு மட்டுமல்ல; அது அவர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கும் செயலாகும்.
“சக மனிதர்களாகக் கூட மதிக்கப்படாத நிலையில், அரசு எங்களைக் கைதூக்கிவிட்டுள் ளது” என்று பணி நியமனம் பெற்றவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுவது, இந்தச் சமூகம் அவர் கள் மீது சுமத்தியிருந்த வலியின் ஆழத்தைக் காட்டுகிறது. ஒரு மனிதரின் உழைப்பு அவரது பாலினத்தால் மதிப்பிடப்படக் கூடாது. காவல் துறை மற்றும் ஊர்க்காவல் படை போன்ற அதி காரமிக்கத் துறைகளில் இவர்களுக்கு இடம ளிப்பதன் மூலம், திருநங்கைகள் குறித்த பொதுச் சமூகத்தின் பிற்போக்கான பார்வையை மாற்றியமைக்க முடியும்.
தனியார் நிறுவனங்கள் வழங்கும் வேலை வாய்ப்புகளைக் காட்டிலும், அரசின் நேரடி அங்கீ காரம் என்பது ஒரு சமூகப் பாதுகாப்பை வழங்கு கிறது. இந்தத் துணிச்சலான முடிவு, ஏற்கெனவே பல்வேறு துறைகளில் தங்களது அடையா ளத்தை மறைத்துக்கொண்டு பணியாற்றும் பல ருக்கும் நம்பிக்கையையும், இனி வரும் இளம் தலைமுறைக்கு ஒரு பிரகாசமான எதிர் காலத்தையும் உறுதி செய்கிறது.
அரசின் இத்தகைய உள்ளடக்கமான நடவ டிக்கைகள் வரவேற்கத்தக்கது. அதே வேளை யில், இந்த அங்கீகாரம் என்பது வெறும் தொடக் கமே. அனைத்து அரசுத் துறைகளிலும் இவர்க ளுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதும், பணியிடங்களில் இவர்களுக்குச் சுமூகமான சூழலை உருவாக்கித் தருவதுமே உண்மையான சமத்துவத்தை நோக்கிய பயணமாக அமையும்.
