headlines

img

நிகழ்காலத் திருட்டும் கடந்த கால புரட்டும்

நிகழ்காலத் திருட்டும்   கடந்த கால புரட்டும் 

நாடாளுமன்றத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்த பணிகள் குறித்து நடை பெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய  உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க் கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கா மல் வழக்கம் போல திசை திருப்பும் பாணியி லேயே பதிலளித்துள்ளார். 

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்ட ணியின் வாக்குத் திருட்டு வெளிப்படையாக நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அதை நியா யப்படுத்த முடியாத அமித் ஷா நேரு, படேல் காலத்திற்கு சென்றுள்ளார். நேரு பிரதமரானது தான் முதல் வாக்குத் திருட்டு என்று அவர் கூறி யுள்ளார். படேல் பிரதமராவதை தடுத்து நேரு பிரதமரானதாக அவர் கூறுகிறார்.

மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர் ந்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்யும் உத்தரவில் உள்துறை அமைச்சர் என்கிற பெய ரில் கையெழுத்திட்டவர் படேல்தான் என்பதை அமித் ஷா வசதியாக மறைத்துவிடுகிறார். அப்ப டியென்றால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை படேல் தடை செய்தது தவறு என்று அமித் ஷா கூறத் தயாரா?

சில விசயங்களில் படேலுக்கும், நேருவுக்கும் கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். அதை இருவருமே ஒப்புக் கொண்டுள்ளனர். நேரு குறித்து படேல் கூறும் போது “இயல்பா கவே எங்களுக்குள் அன்பு பெருக்கெடுத்துள் ளது. பிரச்சனைகளுக்கும், சிக்கல்களுக்கும் தீர்வு காணும் போது அருகில் இல்லையே என்று நாங்கள் ஒருவருக்கொருவர் பிரிவாற்றாமை கொள்வது மற்றவர்களுக்கு தெரிந்திருக்கவும் முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

படேல் மீது உண்மையிலேயே பாசம் இருந் தால் அகமதாபாத்தில் இருந்த சர்தார் படேல் ஸ்டேடியத்தின் பெயரை நரேந்திர மோடி ஸ்டேடி யம் என்று மாற்றியது ஏன்? இது ஒருபுறமிருக்க, கடந்த காலங்களில் எஸ்ஐஆர் நடந்தபோது, எதிர்க்காதவர்கள் இப்போது எதிர்ப்பது ஏன் என்று அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளது விசித்திரமானது.

1961 முதல் எஸ்ஐஆர் பணி நடந்து வந்தபோ தும், நரேந்திர மோடி ஆட்சியில் நடைபெறுவது போல தில்லுமுல்லு அரங்கேறியதில்லை. உண் மையில் மோடி அரசு நிறைவேற்றியுள்ள குடியு ரிமை திருத்தச் சட்டத்துடன் எஸ்ஐஆர் பணியை இணைத்து கோடிக்கணக்கான வாக்காளர்க ளின் வாக்குரிமையை மட்டுமல்ல, குடியுரி மையையும் கேள்விக்குள்ளாக்குவதுதான் பாஜக கூட்டணி அரசின் திட்டம். இதனால் தான் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது எதிர்ப்பு எழுந்துள்ளது.

அமித் ஷா தன்னுடைய உரையின் முடி வில் தமிழ்நாட்டிலும், மேற்குவங்கத்திலும் துடைத்தெறியப்படுவீர்கள் என்று கூறியுள்ளதி லிருந்தே இவர்களுடைய நோக்கம் தெளிவாக புரிகிறது. வாக்கு திருட்டு குறித்த குற்றச்சாட்டை வாக்கு சாதுரியத்தால் மட்டும் மறைத்து விட முடியாது.