headlines

img

ஜம்மு மருத்துவக் கல்லூரி மூடல் - ஓர் அபாயம்!

ஜம்மு மருத்துவக் கல்லூரி  மூடல் - ஓர் அபாயம்!

ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, அது மூடப்பட்டி ருக்கும் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. வெறும் நான்கு மாதங்களுக்கு முன்புதான் ‘தேசிய மருத்துவ ஆணையம்’ (NMC) அனுமதி அளித்த ஒரு நிறுவனம், இன்று “வசதிக் குறைவு” என்ற காரணத்தைச் சொல்லி முடக்கப்படுவது தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. இது நிர்வாக ரீதி யான நடவடிக்கை என்பதை விட, திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்றே தோன்றுகிறது.

இந்த விவகாரத்தில் திரைக்குப் பின்னால் நடக்கும் அரசியல், நாட்டின் கல்விச் சூழல் எத்தகைய ஆபத்தான திசையில் பயணிக்கிறது என்பதையே காட்டுகிறது. சேர்க்கை பெற்ற 50 மாணவர்களில் 42 பேர் காஷ்மீரைச் சேர்ந்த  முஸ்லிம் மாணவர்கள். இந்த ஒரே காரணத்திற் காக இந்துத்துவா கும்பல்களால் எழுப்பப்பட்ட எதிர்ப்பும்  அதனைத் தொடர்ந்து அரசு எடுத்தி ருக்கும் இந்தத் திடீர் முடிவும் தற்செயலானவை என்று கடந்து போய்விட முடியாது. தகுதியின் அடிப்படையில் தேர்வான மாணவர்களை அவர் களின் மத அடையாளத்திற்காகத் தண்டிப்பது சமூக நீதிக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட, அதிநவீன வசதிகள் கொண்ட ஒரு மருத்துவமனை ஏன் திடீ ரென தகுதியற்றதாக மாறியது? தேசிய மருத் துவ ஆணையத்தின் ஆய்வுகள் வெறும் கண் துடைப்பா? அல்லது அரசியல் அழுத்தங்க ளுக்குப் பணிந்து ஓர் உயர்கல்வி நிறுவனம் பலிகொடுக்கப்படுகிறதா? கல்வி நிறுவனத் தையே மொத்தமாக மூடுவது என்பது அங்கு பயிலும் மாணவர்களின் கனவுகளைத் தூக்கிலி டுவதற்குச் சமம். இது அந்தப் பிராந்தியத்தின் மருத் துவத் தேவைகளையும் முடக்கும் செயலாகும்.

கல்வி நிலையங்கள் மதவாத அரசியல் மற்றும் பிராந்திய மோதல்களின் களமாக மாற் றப்படுவது ஒரு ஜனநாயக நாட்டிற்கு அழ கல்ல. “கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டது” என்ற முழக்கம் வெறும் காகிதத்தோடு நின்று விடக்கூடாது. ஜம்மு-காஷ்மீர் போன்ற ஒரு  மாநிலத்தில் மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பது அரசின் முதற்கடமை. அதை விடுத்து, ஒரு தரப்பினரின் எதிர்ப்பிற்காக ஒரு கல்லூரியையே முடக்குவது என்பது ஒட்டு மொத்த மாணவர் சமூகத்திற்கும் விடப்பட்ட அச்சுறுத்தலாகும்.