headlines

img

பொதுச் சொத்துகளின் பேரழிவுக் கொள்ளை

பொதுச் சொத்துகளின் பேரழிவுக் கொள்ளை

மோடி அரசு ரூ.17 லட்சம் கோடி மதிப்பிலான 852 உள்கட்டமைப்பு திட்டங்களை தனியார்மய மாக்கப் போவதாக அறிவித்துள்ளது. பொதுத் துறை-தனியார் கூட்டு முயற்சி என்ற பெய ரில் நடைபெறும் இந்த மிகப்பெரும் கொள்ளை  இந்திய மக்களின் தலைமுறைக் கணக்கான உழைப்பால் உருவான தேசியச் சொத்துகளை பெருநிறுவனங்களின் கைகளில் ஒப்படைக்கும் திட்டமிட்ட சதியாகும்.

சாலைகள், இரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம், நீர் விநியோகம் - எல்லாவற்றையும் அதானி, அம்பானி போன்ற  முதலாளிகளுக்கு விற்கும் இந்த கொள்கை, அடிப்படையில் பொதுச் செலவினம், தனியார் இலாபம் என்ற சுரண்டல் வடிவமாகும். அரசு  மக்களின் வரிப்பணத்தில் நிலம் கையகப்படுத்தி, அனுமதிகள் வழங்கி, உத்தரவாதங்கள் கொடுத்து அனைத்து அபாயங்களையும் ஏற்கிறது. தனியார் நிறுவனங்கள் சுங்கக் கட்டணங்கள், மின் கட்டணங்கள் மூலம் இலாபம் மட்டும் பறித்துக்கொள்கின்றன.

2019ல் அறிவிக்கப்பட்ட ரூ.111 லட்சம் கோடி தேசிய உள்கட்டமைப்பு திட்ட வரிசையின் தொடர்ச்சியான இந்த நடவடிக்கை நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையின் உச்சக்கட்டமாகும். ஆறு விமான நிலையங் கள் ஏற்கனவே அதானிக்கு வழங்கப்பட்டுள் ளன. மேலும் 11 விமான நிலையங்கள் தனியார்மய மாக்கப்பட உள்ளன. இரயில்வேயில் தனியார் ரயில்கள், நிலக் குத்தகைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன. 

சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் மட்டும் 108 திட்டங்கள் ரூ.8.77 லட்சம் கோடி மதிப்பில் தனியார்மயமாக்கப்படுகின்றன. மின்சாரத் துறையில் 48 திட்டங்கள் ரூ.3.04 லட்சம் கோடி மதிப்பில் விற்கப்படுகின்றன. ஆந்திரப் பிரதேசத்தில் மட்டும் 270 திட்டங்கள் ரூ.1.16 லட்சம் கோடி மதிப்பில் உள்ளன. இது மாநிலத்தின் முழு உள்கட்டமைப்பையும் பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு மாற்றும்.

இந்த திட்டங்கள் இருபது முதல் முப்பது ஆண்டுகளுக்கு எதிர்கால அரசுகளை கட்டுப்படுத்தும். வருடாந்திர செலுத்துதல்கள், உத்தரவாதங்கள் மூலம் பொது நிதியை வடிகட்டும். சாமானிய மக்கள் அதிக சுங்கக்  கட்டணங்களையும் பயனர் கட்டணங் களையும் சுமக்க நேரிடும். அத்தியாவசிய சேவைகள் சரக்காக மாறும். ஜனநாயக கட்டுப்பாடுஇழக்கப்படும்.

மோடி அரசின் இந்த கொள்கை தில்லி மின் விநியோகம், மும்பை துறைமுகம் போன்ற  முந்தைய தனியார்மயமாக்கங்களின் தோல்வி யிலிருந்து எந்த பாடமும் கற்காதது. கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தன, சேவை தரம் குறைந்தது, பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது இந்த தோல்வியுற்ற மாதிரியை நாடு முழுவதும் விரிவுபடுத்த முயல்கிறது. இந்த பேரழிவுக் கொள்ளையை எதிர்த்து, மக்கள் ஒன்றுபட்டு போராட வேண்டிய காலம் இது.