headlines

img

‘கோபம் கொண்டெழும் கோடிக்கால் பூதம்’

‘கோபம் கொண்டெழும்  கோடிக்கால் பூதம்’

இந்திய உழைக்கும் வர்க்கம் தனது 22ஆவது பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக முடித் திருக்கிறது. இந்த வேலைநிறுத்தம் வெறும் சம்பள உயர்வு அல்லது வேலை பாதுகாப்பு கோரிக்கைக ளுக்கான போராட்டம் மட்டுமல்ல; மாறாக, முதலா ளித்துவ அரசின் வஞ்சகமான கொள்கைகளுக்கும், உழைப்பைச் சுரண்டும் அமைப்புக்கும் எதிரான கோபத்தின் வெளிப்பாடாகும்.

பெரும் முதலாளிகளும், அவர்களின் கைப்பா வையாகச் செயல்படும் ஊடகங்களும், இந்த வேலைநிறுத்தத்தை “பயனற்றது, வெற்றி பெறாது, ஏழை மக்களுக்கு சிரமம்” எனப் பல கதைகளை அவிழ்த்துவிட்டனர். ஆனால், அவர்களின் கட்டுக் கதைகளுக்கு ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கம் தனது ஒற்றுமையால் பதிலளித்திருக்கிறது.

கடந்த 11 ஆண்டுகளில், மோடி தலைமையி லான பாஜக அரசு தொழிலாளர் சட்டங்களை திருத்தி, திரித்து நான்கு சட்டத் தொகுப்புகளாக வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டங்கள் அனைத் தும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்க ளைப் பாதுகாக்கவே உருவாக்கப்பட்டுள்ளன என்பது வெளிப்படை. 2002ஆம் ஆண்டிலேயே வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு இதற்கு அச்சாரம் போட்டது என்ற உண்மை, இவர்களின் வர்க்கப் பாசத்தை இன்னும் ஆழமாக உணர்த்துகிறது.

வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 முதல் 16 மணி நேரம் வரை நீட்டிக்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சி, தொழிலாளர்களின் உடல்நலத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் கேள்விக்குறியாக் கியுள்ளது. மனித உழைப்பை முடிந்தவரை சுரண்டி பெரும் கார்ப்பரேட்களுக்கு சேவகம் செய்வதையே பாஜக அரசு கொள்கையாக கொண்டிருக்கிறது. 

உற்பத்திச் செயல்முறையில் ஏற்பட்ட மாற்றங் கள், வேலைவாய்ப்பு உறவில் ஏற்பட்ட ஒழுங் கற்ற தன்மைகள், முழு சமூக உற்பத்தி-மறு உற்பத்தி அமைப்பின் கட்டமைப்பு ஆகியவை உழைக்கும் வர்க்கத்தை ஒரு புதிய தளத்திற்குக் கொண்டு வந்துள்ளன. ஒரே கூரையின் கீழ் அனை வரும் ஒன்றாகப் போராடும் பழைய சூழல் மாறி, பல்வேறு துறைகளில் இருந்து எழும் கோபம், தேசம் தழுவிய வேலைநிறுத்தத்தின் மூலம் ஒன்றா கக் கூடியுள்ளது.

தொழிற்சாலை தொழிலாளர்கள், விவசாயி கள், சிறு வியாபாரிகள், கல்வி-சுகாதாரத் தொழி லாளர்கள், பெண் தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத் தொழிலாளர்கள் என அனைவரும் ஒற்றை எதிரிக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளனர். தேசம் முழுவதும் பொதுத்துறை நிறுவனங்கள், ஒன்றிய அரசு அலுவலகங்கள், ரயில்வே நிலை யங்கள் முன்பு மறியல் போராட்டங்கள் நடை பெற்றுள்ளன. 

இந்த வேலைநிறுத்தம், தொழிலாளர் விரோத பாஜக அரசுக்கும், அதற்கு துணை நிற்கும் கூட்டா ளிகளுக்கும் எதிராக கூர்முனை பெற்ற கோபத்தின் வெளிப்பாடாகும். நியாயமான கோரிக்கைகளை அலட்சியம் செய்தால், இந்த போராட்டம் இன்னும் பல மடங்கு வீரியமடையும். பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியும் காலம் விரைவில் வரும் என்பதில் சந்தேகமில்லை.