headlines

img

ஒரே தேர்தல் - நாட்டுக்கு நல்லதல்ல

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே ரேசன் கார்டு, ஒரே உரம் என்று ஒற்றைத் தன்மையை திணித்து வரும் ஒன்றிய மோடி அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்றும் கூறி வந்தது. இந்நிலையில் இதற்கான சட்ட முன் வரைவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது; நாடாளுமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப் பட இருப்பதாகவும்

\அதானி ஊழல் விவகாரம் காரணமாக நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு தொடர்ந்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டு வரும்  நிலையில் சந்தடி சாக்கில் இந்த முன்வரைவை நிறைவேற்றிவிடலாம் என மோடி அரசு கருது கிறது போலும். ஆனால் இது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே. தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதற்கான எந்தத் தேவையும் இல்லை. அதற்கான சாத்தியமும் இல்லைஎன்று நன்றாகத் தெரிந்த போதும் இம்மசோதாவை நிறைவேற்ற மோடி அரசு துடித்து வந்தது. 

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவரை இந்தக் குழுவின் தலைவராக நியமித்ததே தவறு. எனினும் மோடி அரசு இந்த சர்ச்சையில் அவரையும் இழுத்து விட்டது. இந்தக் குழுவிடம் கருத்து தெரிவித்த பெரும்பாலான அரசியல் கட்சிகளும் மாநிலங்க ளும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேவை யில்லை என்று கூறின. எனினும் மோடி அரசின் விருப்பத்திற்கேற்பவே அந்தக் குழுவின் அறிக்கை அமைந்திருந்தது.

இந்த ஒரே தேர்தல் என்ற திட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது. மத்தியில் அதி காரத்தை மேலும் குவிக்கும் தன்மை கொண்டது. ஒரு மாநிலத்தில் ஆட்சிக் கவிழ்ந்தாலோ அல்லது வேறு காரணங்களால் ஆட்சி நடத்த முடியாத சூழல் இருந்தாலோ சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த முடியாது. நாடாளுமன்ற தேர்தல் வரை அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியே அமல்படுத்தப்படும். இந்தியாவின் நாடாளுமன்ற  ஜனநாயகத்தை சீரழிக்கும் பல்வேறு அம்சங்கள் இம்மசோதாவில் இடம்பெற்றுள்ளன. 

இந்த சட்டத்தை நிறைவேற்றுவது எளிதல்ல. அரசியலமைப்புச் சட்டத்தில் ஆறு திருத்தங் களை மேற்கொள்ள வேண்டும். இந்தத் திருத்தங் களை செய்ய நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும். ஆனால் இரு அவைகளிலும் இத்த கைய பெரும்பான்மை பாஜக கூட்டணிக்கு இல்லை என்பதே உண்மை. இதற்காக மாநில அரசுகளி டம் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக தகவல்கள் கூறுகின்றன. மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரான இந்த மசோதாவை அனைத்து மாநிலங்களும் தீர்மானகரமாக நிராகரிக்க வேண்டும். நாடாளு மன்றத்தில் இம்மசோதா எப்போது கொண்டுவரப் பட்டாலும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு இதை முறியடிக்க வேண்டும்.