headlines

img

அரசு பயங்கரவாதத்தின் அரற்றல்

ஊடகங்கள் அமைதியாக இருந்தால் பயங்கர வாதம் முடிவுக்கு வந்துவிடும் என்று தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவல் புதுதில்லியில் திங்களன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசி யிருக்கிறார். 

தேசிய புலனாய்வு முகமை ஏற்பாடு செய்தி ருந்த மாநாட்டின் துவக்க நிகழ்வின்போதே அஜித் தோவல் அவ்வாறு பேசியிருக்கிறார். அந்த மாநாட்டை துவக்கி வைத்து பேசுவதாக இருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தவிர்க்க முடி யாத காரணங்களால் வரவில்லை. அதனால் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் அந்த மாநாட்டில் அமித்ஷாவுக்கு பதிலாக பேசிய தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறு வதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன. அவற்றை அரசாங்கம் தனது தெளிவான தீர்க்க மான கொள்கை முடிவுகளால், நடைமுறைக ளால்தான் தடுக்கவோ, ஒழிக்கவோ முடியும். அதற்கு ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியது பார பட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான். 

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஊடகங்கள் இடையூறாக எப்போதும் இருப்பதில்லை. பயங்கர வாதிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பா விகளையும், தங்கள் அரசியல் எதிரிகளையும் போலி என்கவுண்ட்டர் நடத்தி கொலை செய்வ தைத்தான் ஊடகங்கள் அம்பலப்படுத்துகின்றன. இதுபோன்ற மனித உரிமை மீறல் நடவடிக்கைக ளைத்தான் ஊடகங்கள் நாட்டு மக்களுக்கு தெரி யப்படுத்துவதற்காக உண்மைகளை வெளிக் கொணர்கின்றன. 

இஸ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் வழக்கில் அவரது தாய் இனிமேல் இந்த வழக்கை தொடர்வ தில் எந்த பயனும் இல்லை என்று கண்ணீருடன் அண்மையில் தெரிவித்திருந்தார். அதை நீதி மன்றத்திற்கும் தெரிவிக்கப் போவதாகவும் கூறியி ருந்தார். இத்தகைய நிகழ்வுகள் பலவும் நாட்டில் தற்போதைய ஆட்சியில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. 

குற்றவாளிகள் என நன்கு தெரிந்திருந்த வர்கள் கூட பல்வேறு வழக்குகளில் தப்பித்து செல்வ தும் அவர்களுக்கு பல்வேறு பதவிகள் வழங்கப்படு வதும் கூட பாஜக ஆட்சியில் பரவலாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையிலேயே அவற்றையெல்லாம் அம்பலப்படுத்தவும், உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லவும் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. அத்தகைய முயற்சிகளை  மேற்கொள்ளக் கூடாது என்பது தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவ லின் பேச்சில் தொனிக்கிறது.

காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழித்து விடு வோம் என்ற பெயரில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாநிலத்தையே மயான அமைதியில் வைத்திருக்கிறது மத்திய பாஜக அரசு. அங்கு செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு கூட அனுமதி தரப்படுவதில்லை. அத்துடன் 72 நாட்க ளுக்கு பிறகு செல்பேசிகள் இயங்க அனுமதிய ளித்த சிலமணி நேரத்திலேயே எஸ்எம்எஸ் வசதி மீண்டும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் அவர்களது  ஊடக சுதந்திரம் மீதான கொள்கை யாகும். அதனால்தான் உலைவாயை மூடினால் ஊர் வாயை மூடமுடியும் என்று நினைக்கிறார்கள்.