பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி) புதிய வரைவு மசோதா ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ளவை விதிகளாக இல்லாமல்; மாநில அரசின் உரிமைகளை பறித்து, உயர்கல்வியை சீர்குலைப்பதற்கான ஒன்றிய மோடி அரசின் சதிகளாக இருக்கின்றன. அதனை ஒரு போதும் ஏற்க முடியாது. ஒன்றிய அரசு யுஜிசி புதிய வரைவு அறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும்.
இந்திய அரசியலமைப்பில் கல்வி ஒத்தி சைவு பட்டியலில் இருக்கும் நிலையில் மாநில அரசை முற்றாகப் புறக்கணித்து யுஜிசி எப்படி தன்னிச்சையாக புதிய விதிமுறைகளைத் தீர்மானிக்க முடியும்?
2014 இல் நரேந்திர மோடி பிரதமரான பின்னர், ஆர்எஸ்எஸ்- ஐச் சேர்ந்த கல்வியாளர் தீன நாத்பத்ரா “நாங்கள் அரசு சாராக் கல்வி ஆணை யத்தை அமைப்போம். அந்த ஆணையம் 3 ஆண்டுகளில் கல்விக் கொள்கையை வகுத்துக் கொடுக்கும். அதைத்தான் பாஜக அரசு செயல் படுத்தும்’’ என்றார். அதுதான் இன்று ‘தேசிய கல்விக்கொள்கை 2020’ வடிவில் ஒவ்வொரு நிலையிலும் அமலாக்கப்படுகிறது. அதன் ஒரு உட்கூறுதான் யுஜிசியின் புதிய விதிமுறைகள் 2025- க்கான வரைவு அறிக்கை .
புதிய வரைவில் துணைவேந்தர் தேடுதல் குழு வில் மாநில அரசின் பிரதிநிதியை நீக்கியிருக்கிறது. அதற்குப் பதிலாக ஆளுநர் நியமிக்கும் நபரே குழுவின் தலைவராகவும் இருப்பார் என்கிறது. இனி நேரடியாகக் கல்விப்புலம் சாராத கம்பெனி நிர்வாகிகளும் துணைவேந்தர்களாக நியமிக்கப் படுவர் என்கிறது. அதாவது ஆர்எஸ்எஸ் நபர்க ளைக் கொண்டு சித்தாந்த ரீதியாக உயர் கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் குறுக்கு வழி யையே யுஜிசியின் விதிமுறைகளாக அறிவித்தி ருக்கிறது.
இந்த வரைவு விதிமுறைகள் மத்திய சட்டத் தில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மட்டு மின்றி, மாநிலச் சட்டங்களால் உருவாக்கப்பட்டி ருக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அவற்றின் உறுப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டிருக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத் தின் மீது தொடுக்கப்பட்டுள்ள நேரடியான தாக்கு தலாகும்.
புதிய வரைவைப் பின்பற்றாவிட்டால் யுஜிசி அங்கீகாரம் ரத்து செய்யப்படும், படிப்பவர்களின் பட்டம் செல்லாது, தொலைநிலைக் கல்வி, திறந்த வெளிக் கல்வி மற்றும் ஆன்லைன் வாயிலாக கல்வியை தொடரவும் தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்திருக்கிறது. இது அதிகார அத்து மீறல் மட்டுமின்றி ஆணவத்தின் உச்சமாகும்.
அரசியல் சாசனம் பட்டியல் 2 வரிசை 32 இல் மாநிலப்பட்டியலில் பல்கலைக்கழகங்க ளை உருவாக்கவும், ஒழுங்கு படுத்தவும், கலைப்ப தற்குமான அதிகாரமும் மாநிலத்திற்குதான் உண்டு என தெளிவாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 13 அரசு பல்கலைக்கழகங்களும் தனித்தனி சட்டங்களின் மூலம் மாநில அரசின் நிதி மற்றும் நிலத்தில் உருவாக்கப்பட்டவை. இதில் தலையிட யுஜிசிக்கு எந்த உரிமையும் இல்லை.