ரஃபேல் விமான கொள்முதல் ஊழல் தொடர்பாக பிரான்சில் தனி நீதிபதி விசாரணையைத் தொடங்கி இருப்பதையடுத்து இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மோடி அரசு அனில் அம்பானியின் ரிலை யன்ஸ் நிறுவனத்தை டசால்ட் நிறுவனத்தின் இந்தியப் பங்குதாரராக மாற்றி, ஆதாயம் பெற வைத்ததன் பின்னணியில் இருந்த அரசியல் அழுத்தங்கள் குறித்த தகவல்களை, பிரான்ஸ் புலனாய்வு இணைய இதழான மீடியா பார்ட் ஆதாரங்களுடன் வெளியிட்டதே இதற்குக் காரணம்.காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்சிடம் இருந்து கொள்முதல்செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆட்சி மாறியவுடன் 36 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை 2015 ஆம் ஆண்டுஏப்ரல் 10ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு இரு வாரத்திற்கு முன் ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் டசால்ட்நிறுவனம், தனது இந்தியத் தொழில்நுட்பப் பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது.
அனில் அம்பானியின் நிறுவனத்தை டசால்ட் நிறுவனத்தோடு இணைத்ததன் மூலம், காங்கிரஸ் ஆட்சியின்போது இந்தியாவில் ரஃபேல் விமானங்களைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்த பொதுத் துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்ஸ் லிமிடெட்டை மோடி அரசு திட்டமிட்டுக் கழற்றிவிட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, டி.ஆர்.ஏ.எல். என்று அழைக்கப்படும் டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் என்ற கூட்டு நிறுவனத்தைஉருவாக்கின. உண்மையில், டசால்ட் நிறுவனம் அனில் அம்பானி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் ஆர்வம் காட்டவில்லை. அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகவே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.இந்த கூட்டு நிறுவனத்தில் மொத்தம் 169 மில்லியன் யூரோ முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 159 மில்லியன் யூரோவை வழங்கிய டசால்ட் 49 சதவீதப் பங்குகளை வைத்திருக்கும்போது 10 மில்லியன் யூரோவை மட்டும் முதலீடு செய்த ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 51 சதவீத பங்குகளை ஒதுக்க வேண்டிய அவசியம் என்ன? இந்த நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் யார்? ரிலையன்ஸ் நிறுவனம் யாருடைய பினாமியாகச் செயல்படுகிறது என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
இந்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை, ரஃபேல் ஒப்பந்தத்தில் சேர்த்ததாகவும், தங்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த ஹாலேன்டே கூறியதை நினைவில் கொள்ளவேண்டும். 2016-ஆம் ஆண்டுஹாலண்டேவுக்கு நெருக்கமான பிரான்ஸ் நடிகை ஜூலிகயத்திற்கு, ரிலையன்ஸ் எண்டர்டெய்ன் மென்ட் ஒரு லட்சத்து 60 மில்லியன் யூரோ நிதி வழங்கியது. அந்த நிதி உண்மையில் யாருக்குச்சென்றது.?
ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பானபாஜக அரசின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரிய தாக உள்ளன. எனவே பல்லாயிரம் கோடி ரூபாய் கைமாறியுள்ள இந்த பேரம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் நாடாளுமன்ற கூட்டுக்
குழு விசாரணைக்கு உத்தரவிடுவதே பொருத்த மாக இருக்கும்.