பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்து ரக்சா அமைப்பைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாகச் சென்று கொடூரமான ஆயுதங்களை விநியோகித்துள்ளனர். இந்துக்கள் தாக்குதல் தொடுக்க இந்த ஆயுதங்களை விநியோகிப்ப தாக அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதை ஒரு தனித்த நிகழ்வாக பார்க்க முடியாது. உ.பி.யில் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட மதப்பகைமையை தூண்டும் வகையில் பேசியும், செயல்பட்டும் வருகின்றனர். அந்த மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகி யோரும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்களும் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரித்து வரு கின்றன. கிறிஸ்துமஸ் திருநாளன்று கூட நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் தலையிடுமாறு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார். திருத்தணி யில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தாக்கப் பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதேபோல தமிழ்நாட்டில் போதைப் பழக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதும் உண்மையே. ஆனால் இதைச் சொல்கிற உரிமை பாஜகவிற்கு உண்டா என்பதும், மாநில விவ காரத்தில் ஒன்றிய அரசை தலையிடுமாறு கோரு வதன் தேவை என்ன என்பதும் தான் கேள்வி.
பாஜகவுக்கு நெருக்கமான அதானிக்கு சொந்தமான துறைமுகம் வழியாக போதை பொருள் கடத்தல் அமோகமாக நடந்து கொண்டி ருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக வகையறா திட்ட மிட்டு மதக்கலவரத்தை உருவாக்க முயல்கிறது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருநாளன்று வழக்கம் போல தீபம் ஏற்றப்பட்ட நிலையில் அதை இங்குள்ள பாஜகவினர் மட்டு மின்றி தமிழ்நாட்டிற்கு வரும் ஒன்றிய அமைச் சர்களும் தொடர்ந்து பிரச்சனையை ஏற்படுத்த முயல்கின்றனர்.
தமிழ்நாட்டிற்கு வந்த ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திருப்பரங் குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை என்று உண்மைக்கு மாறாகப் பேசுகிறார். தீபம் ஏற்று வதை தடுப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்றும் கூறுகிறார். அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க முயல்வது பாஜக பரிவாரம்தான். தமிழ்நாட்டை தொடர்ந்து புறக் கணித்து வரும் ஒன்றிய அரசு ஒருபுறம் கலவரத்தை தூண்டிவிட்டுக் கொண்டே மறுபுறத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக பாஜகவினர் பேசுவது வெட்கக்கேடானது.
