headlines

img

கலவர பூமியாக்க முயற்சி!

கலவர பூமியாக்க முயற்சி!

தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பினர் தொடர்ந்து முயன்று வருகின்றனர். தற்போது திருப்பரங் குன்றம் மலையை குறிவைத்திருக்கின்றனர்.ஆனால், சங்கிகளின் சூழ்ச்சிக்கு தமிழக மக்கள் இடமளிக்காமல், மதநல்லிணக்கத்தை பாதுகாத்து  தங்களின் ஒற்றுமையை மீண்டும் நிலை நிறுத்தியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை, இந்தியாவிற்கே மத நல்லிணக்கத்திற்கான முன்மாதிரியாக திகழ்கி றது. அங்கு பரங்கிநாதர் கோவில், முருகன் கோவில், சமண சிற்பங்கள், சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் ஒருங்கே அமைந்துள்ளன. சமணம், இந்து, இஸ்லாம் ஆகிய மதங்கள் ஒரே இடத்தில் சங்க மித்து, மதநல்லிணக்கத்தின் அடையாளமாக திருப்பரங்குன்றம் மலை விளங்குகிறது.

அங்குள்ள இந்துக்களும், இஸ்லாமியர்களும் மாமன், மச்சான், அண்ணன், தம்பி என உறவா கப் பழகி வருகின்றனர். இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க, ஏற்கெனவே திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்போகிறோம் எனும் பெயரில் கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் சங்பரிவார் கும்பல் இறங்கியது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.

தற்போது, சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடக் கூடாது என இஸ்லாமியர்களை குறி வைத்து, பாஜக, இந்துமுன்னணி கும்பல் வம்பி ழுக்கிறது. இது, பிராமணிய கோட்பாட்டின் அடிப்ப டையில் “அசைவம் உண்ணக்கூடாது” என்பதைக் கட்டாயமாக்க முனைகிறது. ஆனால், வழி பாட்டு உரிமை என்பது இந்திய அரசியல் சட்டம்  வழங்கிய அடிப்படை உரிமையாகும். அதனை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

கடந்த 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடை முறையில் இருந்து வரும் இந்த வழிபாட்டு நடை முறை, இப்போது புதிதாக தோன்றியது என பாஜக தரப்பு தவறான தகவல்களை பரப்புகிறது.  திருப்பரங்குன்றம் மலையில் யார் எப்படி வழிபாடு செய்ய வேண்டும், எந்த இடத்தை பயன் படுத்தலாம், அது யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து, 1920 ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. 1923 இல் நீதிபதி ராமையர் தனது தீர்ப்பினை வழங்கினார். இந்த தீர்ப்பை 1931 இல் லண்டன் பிரிவி கவுன்சில் உறுதி செய்தது.1975 இல் மீண்டும் வழக்கு தொடுக்கப்பட்டபோதும், முந்தைய தீர்ப்புகளையே நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்தது. அதன்படி, அனைத்து தரப்பின ரும் இன்றுவரை அந்தத் தீர்ப்பின்படி நடந்து கொள்கின்றனர்.

இவற்றை மீறி, பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பினர் சட்டத்தைக் கடந்து, கலவரம் செய்துஅதிகாரத்தை பிடிக்க முயல்கின்றனர். இந்த கலவர முயற்சிகளை தமிழக மக்கள் ஒன்றிணைந்து எதிர்த்தே ஆக வேண்டும். மதநல்லிணக்கத்தை அழிக்க முனைவோரை தமிழக மக்கள் தனிமைப்படுத்த வேண்டும்.