headlines

img

அச்சத்தின் உச்சம்!

பாஜக தலைமையிலான ஒன்றிய மோடி அரசு  இந்தியாவில் உள்ள  140 கோடி மக்களை யும் வேவு பார்க்கும் வேலையைத் துவக்கியி ருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மோடி அரசிற்கு இந்திய மக்களின் மீது இருக்கும் அச்சத்தின் உச்சமே இந்த ரகசிய உளவு.

2019 இல் மோடி அரசு இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென் பொருள்  மூலம் சட்டவிரோதமாக வேவு பார்க் கும் பணியைத் துவக்கியது. அதில்  நீதிபதிகள்,  இந்தியப் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள்,  தொழிலதி பர்கள், அரசியலமைப்புப் பதவியில் இருப்பவர் கள் என 300-க்கும் மேற்பட்டவர்களை வேவு பார்த்தது அம்பலமானது. 

உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் தலைமையிலான குழு முன்பு கூட மோடி அரசால், ‘நாங்கள் ஒட்டுக்கேட்கவில்லை எனக் கூறமுடியவில்லை. இந்துத்துவா கருத்தி யலுக்கு எதிரானவர்கள், ஊழலுக்கு எதிரான வர்கள், நேர்மையானவர்கள்  உள்ளிட்ட  சில  குறிப்பிட்ட நபர்களை மட்டுமே மோடி அரசு ஒட்டுக் கேட்டு வந்தது. அதன் மூலம் அவர்களின் தனிநபர் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்தி ரத்தையும் பறிக்க முயன்றது. ஆனால் தற்போது ஒட்டுமொத்த இந்திய மக்களின் சுதந்திரத்தை யும் பறிக்க முயன்றிருக்கிறது. 

இஸ்ரேலைச் சேர்ந்த  காக்னிட் (Cognyte) மற்றும் செப்டியர் (Septier) தொழில்நுட்ப நிறுவ னங்களிடமிருந்து மோடி அரசு சக்தி வாய்ந்த கண்காணிப்பு கருவிகளை  வாங்கியிருக்கிறது  என லண்டனிலிருந்த வெளிவரும் பைனான்சி யல் எக்ஸ்பிரஸ் தெரிவித்திருக்கிறது.  குறிப்பாகக் கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள தகவல் தொடர்பு கேபிள்கள் மூலம் இந்த கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடாபோன், சிங்டெல் (சிங்கப்பூர் நிறுவனம்) ஆகிய நிறுவனங்கள் மூலம் இந்த உளவுக் கருவி கள் வாங்கப்பட்டு ஆழ்கடல் கேபிள் மையங்க ளில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த உளவு கருவிகள் மூலம்  ஒட்டுமொத்த இந்திய மக்களின் குரல்பதிவு, குறுஞ்செய்தி,  சமூக ஊடகங்களின் செயல்பாடு உள்ளிட்ட அனைத்தையும் கண்கா ணிக்க முடியும். வீட்டின் படுக்கையறை வரை கண்காணிக்க முடியும். 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வெளிப் படையாகவே கண்காணிப்பு கருவிகளைக் கட லுக்கு அடியில் உள்ள லேண்டிங் நிலையங்கள் மற்றும் தரவு மையங்களில் நிறுவ வேண்டும் என்ற நிபந்தனையை மோடி அரசு விதித்திருக்கி றது என்றும் அந்த செய்தி கூறுகிறது. அதாவது ஒட்டுமொத்த  இந்திய  மக்களின் நடவடிக்கை யையும் இஸ்ரேல் நிறுவனங்கள் அறிந்து கொள்ள முடியும். மோடிக்கு ஆதரவாக செயல் பட முடியும். சங்பரிவார் விரும்புவது போல் உள் நாட்டுக் குழப்பங்களையோ, கலவரங்களையோ ஏற்படுத்த முடியும்.  இது அப்பட்டமான  தேச விரோதச் செயல் ஆகும்.