headlines

img

சர்வதேச சந்தையும் உள்நாட்டு விந்தையும்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. கடந்த வாரம் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 90 டாலர்களுக்கு கீழாக சரிந்தது. இது கடந்த ஏழு மாதங்களில் இல்லாத சரிவாகும்.

அதன்பின்னர் சற்று உயர்ந்து பீப்பாய் விலை 92.84 டாலர்களாக விற்பனையானது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதிக விலைக்கு விற்கப்படுகிறது. 

சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்பவே இந்தி யாவில் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று பாஜக கூட்டணி அரசு கூறுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதெல்லாம் உள்நாட்டில் அதைக் காரணம் காட்டி உயர்த்தப்பட்டது. 

பல்வேறு சந்தர்ப்பங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் அதன் பலன் நுகர்வோ ருக்கு கிடைக்கவிடாமல் பல்வேறு புதிய புதிய வரிகளை விதித்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே சென்றது மோடி அரசு.

ஆனால் இந்தியாவில் எரிபொருள் விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பம்மாத்து செய்கிறார். சர்வதேச சந்தையில்  கச்சா எண்ணெய் விலை சரிந்தது மட்டுமல்ல, ரஷ்யாவிட மிருந்து எரிபொருளை கூடுதலாக இந்தியா தற்போது வாங்கிக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தவிர்க்கும் நிலையில் குறைந்த விலையில் ரஷ்யாவிடமிருந்து எரி பொருளை இந்தியா வாங்குகிறது. இதன் மூலம் கிடைக்கும் அனுகூலத்தையும் நுகர்வோருக்கு தர மறுக்கிறது மோடி அரசு.

தேர்தல் வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை சற்று குறைக்கப்படுகிறது. அல்லது உயர்த்தப்படாமல் அதே நிலையில் பராமரிக் கப்படுகிறது. இந்தாண்டு துவக்கத்தில் உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடந்ததால் 137 நாட்களுக்கு விலையில் மாற்றம் செய்யப்பட வில்லை. அதன்பிறகு விலை உயர்த்தப்பட்டது. மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரையிலான கால கட்டத்தில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் சமையல் எரிவாயு விலையில் தொடர்ந்து உயர்த்தப்பட்டுக் கொண்டே வரு கிறது. வங்கிக் கணக்கில் மானியத்தை செலுத்துவ தாக சொன்ன அரசு கிட்டத்தட்ட சமையல் எரிவா யுக்கான மானியத்தை நிறுத்தி விட்டது. 

சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள்தான் எரிபொருள் விலையை தீர்மா னிக்கிறது என்று ஒன்றிய அரசு கூறுவது வெறும் ஏமாற்று வேலையே என்பது மீண்டும் மீண்டும் நிரூ பணமாகி வருகிறது. இப்போது சர்வதேச சந்தை யில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு முன் வரவேண்டும்.

;