ஒன்றிய பாஜக கூட்டணி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறச் செய்வதற்கான உலகின் நீண்ட நெடிய வீரஞ்செறிந்த போராட்டத்தை முடித்துக் கொண்டு தலைநகர் தில்லியிலிருந்து உழுகுடிகள் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உயி ருக்கும் மேலாக நேசிக்கும் நிலம் வெற்றி திலகமிட்டு அவர்களை வரவேற்கும் என்பது திண்ணம்.
வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஓராண்டு காலத்திற்கும் மேலாக கொட்டும் மழை, கொளுத்தும் வெயில், உறைய வைக்கும் பனி என அனைத்தையும் நெஞ்சுரத்து டன் ஏற்றுக் கொண்டு விவசாயிகள் போராடி னார்கள். இந்தச் சட்டங்களை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்ற மோடி அரசின் ஆணவத்தை மோதி மிதித்திருக்கிறார்கள் இந்திய வேளாண் பெரும்குடி மக்கள்.
வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக மோடி அரசு அறிவித்தது. ஆனால் இந்த வாய் வாக்குறுதியை நம்ப விவசாயிகள் மறுத்துவிட்டார்கள். ஏனெனில் இந்திய மக்களின் கடந்த கால அனுபவம் அப்படி.
எந்த நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தங்க ளை கொண்டு வந்தார்களோ அதே நாடாளு மன்றத்தில் நீண்ட நெடிய படிக்கட்டுகளில் ஏறி வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவ தாக எழுத்துப் பூர்வமாக அறிவிக்கும் வரை போராட் டம் தொடரும் என்று அறிவித்தார்கள். வேறு வழி யின்றி அவ்வாறே அறிவித்தது ஒன்றிய அரசு.
எனினும் குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றால்தான் போராட்டம் முடிவுக்கு வரும் என்று அறிவித்து அதற்கான உத்தரவாதத்தையும் பெற்ற பிறகே போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்தது.
மோடி அரசின் முரட்டு பிடிவாதத்தால் 715 விவசாயிகள் வீரத் தியாகிகளாக மாறினார்கள். இந்த மகத்தான தியாகிகளுக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குவதாக போராட்டத்தை முன்னின்று நடத்திய சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.
ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறை சட்டங்களையும் எதிர்கொள்வ தற்கு போராட்டம் ஒன்றே சிறந்த வழி என்பதை விவ சாயிகள் உரத்து முழங்கியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் அநீதிக்கும் சுரண்டலுக்கும் எதிராக போராடிக் கொண்டிருக்கும் கோடானுகோடி உழைக்கும் மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி அமைந்துள் ளது.
இந்த போராட்டத்தை மோடி ஆட்சியில் இருக்கும் வரை விலக்கிக் கொள்ள மாட்டார். அது வரை வீடு திரும்ப மாட்டீர்களா என்று கேட்டதற்கு அப்படியெனில் மோடி அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சட்டத்தை வாபஸ் வாங்கிய பிறகுதான் வீடு திரும்புவோம் என்றார்கள் விவ சாயிகள். ஆனால் கொடூர சட்டத்தை முறி யடித்துவிட்டு வெற்றி புன்னகையோடு வீடு திரும்புகிறார்கள். இந்த வெற்றி மோடி அரசையும் வீட்டுக்கு அனுப்பும் என்பது திண்ணம்.