மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டு மானப்பணி 2026 அக்டோபரில் நிறைவடையும் என்றும், ஆனால் கட்டுமானப்பணி எப்போது துவங்கும் என்று தெரியாது எனவும் ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்குத்தான் ஒன்றிய அரசு இத்தகைய பொறுப்பற்ற பதிலை தந்துள்ளது.
திட்ட மேலாண்மை நிறுவனத்தை இறுதி செய்யும் பணி நடந்து வருவதாகவும், சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி உள்ளிட்ட முதலீட்டுக்கு முந்தைய பணிகள் 92 சதவீதம் முடிவடைந்துள்ளது எனவும் ஒன்றிய அரசு தெரிவிக்கின்றது.
அண்மையில் தமிழ்நாட்டுக்கு வந்த பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளி யிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்க டேசன், மாணிக் தாகூர் ஆகியோர் அந்த இடத்திற்கு சென்று சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப் பட்டிருப்பதை சுட்டிக்காட்டி நட்டாவின் ஏமாற்று வேலையை அம்பலப்படுத்தினர். உடனே சுதா ரித்துக் கொண்ட பாஜகவினர் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் 95 சதவீதம் முடிவடைந்து விட்டது என்றுதான் நட்டா கூறினார் என சமாளித்தனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்பது மதுரை மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து தென் மாவட்ட மக்களினுடைய கன வாகவும் இருந்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை செயல்பட துவங்கினால் தென் மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளத் திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
2015இல் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்து வமனைக்கு 2018இல் இடம் தேர்வு செய்யப்பட்டு 2019இல் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் மார்ச் 2021இல் தான் ஜப்பானின் ஜெய்க்கா நிறு வனத்துடன் கடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப் பட்டது. ஆனால் அதன் பிறகும் கட்டுமானப் பணி துவங்கப்படவில்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட பிளாஸ்பூர் மருத்துவ மனை பிரதமர் மோடியால் திறந்து வைக்கப் பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் பெரும் முதலீட்டில் கட்டுமானப் பணி முடிந்து விட்டது. ஆனால் மதுரைக்கு மட்டும் வெளிநாட்டு கடன் உதவி என்று கூறி இழுத்தடித்தது ஒன்றிய அரசு. கடனுக்கான உடன்பாடு ஏற்பட்ட பிறகும் கூட கட்டுமானப்பணி துவங்கவில்லை. இது தமிழக மக்களின் மீதான மோடி அரசின் வன்மத்தையே காட்டுகிறது. தமிழகத்தை மோடி அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதன் தொடர்ச்சியே இது. உடனடியாக மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி துவக்கப்பட வேண்டும்.