headlines

img

தேர்தல் ஆணையத்தின் தோல்வி

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது  மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் 19ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் ஜுன் 1ந்தேதி 7வது கட்ட மாக இறுதி கட்ட வாக்குப்பதிவு நடந்து  முடிந்துள் ளது. ஜுன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது. 

பல்வேறு ஊடகங்கள் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒன்றிய பாஜக அரசின் நிர்ப்பந்தம் காரணமாக கருத்துத் திணிப்பை வெளியிட்டுக் கொண்டி ருக்கின்றன. பல்வேறு தருணங்களில் வாக்குப் பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பொய்யாகப் போன வரலாறு உண்டு. 2004ஆம் ஆண்டு பாஜக கூட்டணி மீண்டும் வெற்றிபெறும் என்று பெரும்பாலான தேசிய  ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்ட நிலையில் அந்தக் கூட்டணி தோல்வி  அடைந் தது. 20 ஆண்டுகள் கழித்து கிட்டத்தட்ட அதே  எண்ணிக்கையில் பாஜகவுக்கு ஆதரவாக ஊட கங்கள் கருத்துக் கணிப்புகளை வெளி யிட்டுள்ளன. 

ஜுன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெறும் போது வெற்றி, தோல்வி நிலவரம் தெளி வாக தெரிந்துவிடும். ஆனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே இந்தத் தேர்தலை நேர்மையாகவும் சுயேட்சையாகவும் பாரபட்ச மின்றியும் நடத்துவதில் இந்தியத் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்துவிட்டது என்று கூறமுடியும். 

தேர்தல் ஆணையர்களை நியமிப்பதிலேயே ஒன்றிய அரசு தன்னுடைய திருகுதாள வேலை யை ஆரம்பித்துவிட்டது. தேர்தல் ஆணை யம் நியமனத்தின் போது உச்சநீதிமன்ற தலை மை நீதிபதியின் கருத்தை அறிய வேண்டும் என்பதையே மாற்றியது. நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையை பெற வேண்டும் என்பதை வெறுமனே தகவல் தெரிவிக்கும் ஏற்பாடாக மாற்றியது. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை பெரிதும் கேள்விக்குள்ளாக்கியது. 

நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்களும் தங்களது எஜமான விசுவாசத்தை காட்டிக்  கொண்டனர். தேர்தல் தேதி அறிவிப்பு பிரத மர் உள்ளிட்டவர்களுக்கு முன்கூட்டியே தெரி விக்கப்பட்டதால் அதற்கேற்ப ஆளுங்கட்சியின் பிரச்சாரம் அமைக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும்  அமித்ஷா உள்ளிட்டவர்கள் இந்திய தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அள வுக்கு வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் செய்த போதும் தேர்தல் ஆணையம் உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. மறைமுக பிரச்சார மான பிரதமர் மோடியின் தியான நாடகத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச கோரிக்கையைக் கூட தேர்தல் ஆணையம் பரி சீலிக்கவில்லை. வாக்கு சதவீதத்தை அறிவிப்ப திலும் கூட பல்வேறு குளறுபடிகள்.  தேர்தல் சீர்திருத்தம் குறித்து தொடர்ச்சியாக வலியுறுத்தப் பட்டு வரும் நிலையில் தேர்தல் ஆணைய சீர் திருத்தம் முதல்கட்டமாக மேற்கொள்ளப்படவேண்டும்.