headlines

img

விழிப்போடு இருப்போம்!

கடைசியாக ஏவப்பட்ட ‘எக்ஸிட் போல்’ எனப்படும் ‘தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு’ உள்பட, 18ஆவது மக்களவைத் தேர்த லில் பாஜக ஏவிய அனைத்து அம்புகளும் படுதோல்வியடைந்து மண்ணைக் கவ்வி விட்டன. இன்றைய தினம் (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை துவங்கி சில மணி நேரங்களில் இந்திய தேசத்தின் ஆட்சி அதிகாரத்திலிருந்து மதவெறி பாஜக தூக்கியெறியப்பட்டது என்ற செய்தி வெளியாகத் துவங்கிவிடும் என்ற பெரும் நம்பிக்கையுடன் நாட்டு மக்கள் காத்தி ருக்கிறார்கள்.

இந்திய நாட்டில் மட்டுமல்ல, சர்வதேச அள விலும் உன்னிப்புடன் கவனிக்கப்படும் தேர்தலாக 18ஆவது மக்களவைத் தேர்தல் அமைந்துள்ளது. 

தேர்தல் நடைமுறைகள் துவங்கியது முதல் தனது கடைசி அஸ்திரமாக தேர்தல் ஆணை யத்தையே கைப்பாவையாக பாஜக மாற்றிக் கொண்டது என்றே குறிப்பிடலாம். தேர்தல் பிரச்சார காலம் முழுவதிலும் மிக அதிக பட்ச தேர்தல் நடத்தை விதிமீறல்களை அரங் கேற்றிய கட்சி பாஜக தான். அதிலும் குறிப்பாக தேர்தல் விதிகளை முற்றிலும் காலில் போட்டு மிதித்தவர் பிரதமர் நரேந்திர மோடி தான். ஆனால் இதற்கு எதிராக தேர்தல் ஆணையம் சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை. இத்தகைய பின்னணியில்தான் வாக்கு எண் ணிக்கையில் தேர்தல் ஆணையம் மூலமாக ஏதேனும் ஒரு வகையில் தனது தகிடுதத்தங்களை பாஜக அரங்கேற்றுமோ என்ற அச்சம் மக்களி டையே இருக்கிறது. 

இந்த நிலையில்தான் (ஜூன் 2 ) அன்று தலைமைத்தேர்தல் ஆணையத்தை நேரில் சந்தித்து, வாக்கு எண்ணிக்கையில் நேர்மையாக நடந்து கொள்க என்று இந்தியா கூட்டணி தலை வர்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். இதை ஏற்று, பாஜக அரசு நிச்சயமாக வீழப் போகிறது என்பதை இப்போதேனும் உணர்ந்து, தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையில் நேர்மை யாகவும், சட்ட விதிகளின்படியும் நடந்து கொள்ள வேண்டும். 

மறுபுறத்தில், தேர்தல் தோல்வியை அத்தனை சுலபமாக பாஜக ஏற்றுக் கொள்ளாது என்றும்; நிலைமை பாதகமாக மாறும் என் றால், பாஜக, தான் பலமாக உள்ள - ஆளுங்கட்சி யாக உள்ள மாநிலங்களில் கலவரங்களை தூண்டவும் தயங்காது என்றும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.தென் மாநிலங்க ளில் முற்றாக துடைத்தெறியப்படுவோம் என்பது பாஜகவுக்கு நிச்சயம் தெரியும். அவர்கள் உத்த ரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா,  பீகார், ஒடிசா, குஜராத் போன்ற - பெரிய வட மாநிலங்களில் கணிசமான இடங்களை நிச்சயம் பெறுவோம் என்று கருதுகிறார்கள். அது பொய்யாகப் போகிறது. பாசிசத்தன்மை கொண்ட பாஜக ஆத்திரத்தில் என்ன வேண்டு மானாலும் செய்யலாம். எச்சரிக்கையோடு, விழிப்போடு களத்தில் நிற்போம்.

;