ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்று கூறியுள்ளார். முற்றிலும் உண்மை. ஆனால் ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக்கொள்கை 2020 என்ற பெயரில் சமஸ்கிருதம், இந்தி, மொழிகளை திணிக்கும் காரியத்தைத்தானே செய்கிறது.
விடுதலைப் போராட்டக் காலத்திலேயே கல்வி கற்பித்தல் அவரவர் தாய்மொழியில் தான் செய்யப் படவேண்டும் என்று பெரும்பகுதியினர் விரும்பினர். ஆயினும் சமஸ்கிருத, இந்தி வழியிலேயே, கற்பிக்க வேண்டுமென்றும் ஆங்கில வழியிலேயே கற்பிக்க வேண்டுமென்றும் ஒரு சிறு பகுதியினர் வற்புறுத்தி வந்தனர்.
அன்றைய விடுதலைப் போராட்ட ஒற்றுமை உணர்வு மேலோங்கி இருந்த நிலையில் கல்வியா ளரான கவியரசர் தாகூர் சாந்தி நிகேதன் எனும் கல்வி நிலையத்தில் தாய்மொழியிலேயே கற்பித்தார். மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தலைவர்களும் தாய்மொழிக் கல்வியையே வலியுறுத்தினர். அதுவே பின்னர் பெரும்பான்மை கோரிக்கையானது.
ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கில வழியில் கற்பிக்கும் நிலை ஆட்சியாளர்க்கு ஏதுவாக அமைந்தது. அதனால் அவர்கள் இருமொழி கொள்கையைக் கடைப்பிடித்து வந்தனர். தமிழ கம் போன்ற மாநிலங்கள் அத்தகைய வழியிலேயே கல்வியை வழங்கி வந்தன. ஆயினும் விடுதலைக்கு பிந்தைய ஆட்சியில் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டு தாய்மொழிக் கல்வியை பின்னுக்குத் தள்ளியது. எனினும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு இருந்தது.
அத்தகைய நடைமுறையையே தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் ஒன்றிய பாஜக ஆட்சி, ஆர்எஸ்எஸ்சின் கல்வி கொள்கையான சமஸ்கிருத வழியை மற்ற மொழி பேசும் மக்கள் மீது திணித்து ஒரே நாடு, ஒரே மொழி என்று போலி தேசியம் பேசுகிறது. ஆனால் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு போன்றவர் கள் தாய்மொழிக் கல்வியையே ஆதரித்துப் பேசினர்.
பின்னர் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த்தும், தாய்மொழி கல்வியின் முக்கியத்து வத்தை பேசிக் கொண்டே தேசிய கல்விக் கொள் கைக்கு அதாவது சமஸ்கிருத, இந்தி திணிப்புக்கு ஆதரவாகவே பேசினர். அவரின் தொடர்ச்சியா கவே குடியரசு தலைவர் முர்முவும் இப்போது பேசியிருக்கிறார்.
அத்துடன் பள்ளிக் கல்வி, உயர்நிலைக் கல்வி யில் இந்திய மொழிகளில் பாடம் நடத்த தேசிய கல்விக்கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று பூசி மெழுகியிருக்கிறார். நானும் தாய்மொழி யில்தான் கல்வி கற்றேன் என்று கூறியிருக்கும் குடியரசுத் தலைவர் தன்னுடைய எஜமான அமைப் பான ஆர்எஸ்எஸ்சின் கொள்கையையே எதிரொ லித்திருக்கிறார். ஆயினும் நாட்டு மக்கள் தங்க ளது தாய்மொழியில் கல்வி பயில்வதையே விரும்பு வர். அதுவே அவர்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் கல்வி மேம்பாட்டிற்கும் உகந்ததாக இருக்கும்.