games

img

காமன்வெல்த் 2022: தங்கம் வென்ற பி.வி.சிந்து, லக்‌ஷயா சென்

காமன்வெல்த் 2022 தொடரில், இன்று நடந்த போட்டிகளில், இந்தியாவின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லக்‌ஷயா சென் ஆகிய இருவரும் தங்கப் பதக்கங்கள் வென்றனர்.

காமன்வெல்த் 2022 விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டிகளில், பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் மிச்செல்லா லீயை எதிர்கொண்டார். இந்த போட்டியில், பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார். அதே போல், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென், மலேசியாவின் சீ யாங்கை எதிர்கொண்டார். இந்த போட்டியில், லக்‌ஷயா சென் 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம், இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கல என மொத்தம் 56 பதக்கங்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது.
 

;