games

img

விளையாட்டு...

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து 2025 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிஎஸ்ஜி

ஐரோப்பிய கண்ட கிளப் அணி களுக்கு இடையே நடத்தப் படும் சாம்பியன்ஸ் லீக் தொடர் தற் போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி வியாழக் கிழமை அன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி - பிரான்ஸ் கிளப்) - அர்சனேல் (இங்கிலாந்து கிளப்) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த அரையிறுதி ஆட்டத்தின் முதல் லெக் ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் பிஎஸ்ஜி முன்னிலையில் இருந்த நிலையில், தொடர்ந்து வியாழ னன்று நடைபெற்ற அரையிறுதியின் இரண்டாவது லெக் ஆட்டத்தில் 2-1  என்ற கணக்கில் அர்சனேலை வீழ்த்தி,  3-2 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி இறுதிக்கு முன்னேறியது.  இதன்மூலம் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பிஎஸ்ஜி இரண்டாவது முறை யாக இறுதிக்கு முன்னேறியது. இதற்கு  முன்னர் 2020ஆம் ஆண்டு இறுதிக்கு முன் னேறி பேயர்ன் மூனிச் அணியிடம் பிஎஸ்ஜி கோப்பையை பறிகொடுத்தது.  அதே போல தொடர்ந்து 19 ஆண்டு களாக இறுதிக்கு முன்னேறாமல் சாம்பி யன்ஸ் லீக்  தொடரில் இருந்து விடை பெற்றது அர்சனேல். கடைசியாக அர்சனேல் அணி 2006ஆம் ஆண்டு இறு திக்கு முன்னேறி பார்சிலோனா அணியிடம் தோல்வியை சந்தித்து சாம்பியன்ஸ் லீக் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 1 அன்று இறுதி  ஆட்டம்

பிஎஸ்ஜி (பிரான்ஸ் கிளப்) - இன்டர் மிலன் (இத்தாலி)

இடம் : அலையன்ஸ் அரினா, ஜெர்மனி
நேரம் : நள்ளிரவு 12:30 மணி
சேனல் : சோனி டென் 2, சோனி லைவ்

ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி சாதனை

18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 57ஆவது போட்டி யில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா வும்,  5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான சென்னை அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கர வர்த்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றி னார். இதன்மூலம் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து அவர் சாதனை படைத்துள்ளார்.  அதாவது வருண்  சக்கர வர்த்தி 82 இன்னிங்ஸில் 100 விக்கெட்டு களை கைப்பற்றி, சாதனை படைத் துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

 82 இன்னிங்ஸ் -  வருண் சக்கரவர்த்தி 83 இன்னிங்ஸ் -  யுஸ்வேந்திர சஹால் 83 இன்னிங்ஸ் -  ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) 83 இன்னிங்ஸ் - அமித் மிஸ்ரா 85 இன்னிங்ஸ் -  சுனில் நரைன் (மே.இ.தீவுகள்)

ஐபிஎல் 2025 இன்றைய  ஆட்டம்

லக்னோ - பெங்களூரு

நேரம் : இரவு 7:30 மணி
இடம் : எகானா மைதானம், லக்னோ, உ.பி.,
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)