games

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

ஆடவர் பிரிவில் கடும் போராட்டம்
இளம் வீரர்களிடம் மூன்றரை மணிநேரத்திற்கு மேலாக போராடும் முன்னணி வீரர்கள்

112 ஆண்டு பழமையான டென் னிஸ் தொடரான ஆஸ்தி ரேலிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் தற்பொழுது 2-ஆம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலை யில், முன்னெப்போதும் இல்லாத வகை யில் நடப்பு சீசன் ஆடவர் ஒற்றையர் பிரிவில்  2-ஆவது சுற்று ஆட்டத்தில் முன் னணி வீரர்கள், தரவரிசையில் இல்லாத வீரர்களிடம் கடுமையாக திணறி அடுத்த சுற்றுக்கு முன்னேறி வருகிறார்கள்.

ஜுவரேவ் 4:31 மணிநேரம் :
உலக தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் ஜுவ ரேவ், தரவரிசை இல்லாமல் தகுதி சுற்று மூலம் நுழைந்த செர்பியாவின் லூகாஸை எதிர்கொண்டார். இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை குவித்ததால் இந்த ஆட்டம் 4:31 மணி நேரம் வரை நீடித்த நிலையில், இறுதி யில் ஜுவரேவ் 7-5, 3-6, 4-6, 7-6 (7-5),  7-6 (10-7) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துடன் வெற்றி பெற்று 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

நோரி 3:35 மணி நேரம் : 
உலகத் தரவரிசையில் 19-ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனின் நோரி 3-6, 6-7 (4-7), 6-2, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தரவரிசையில் இல்லாத இத்தாலியின் ஜேப்பியாரியை 3:35 மணி நேரம் போராடி வீழ்த்தினார்.

ரூத் 3:50 மணிநேரம் : 
உலகத்தரவரிசையில் 11-ஆவது இடத்தில் உள்ள நார்வே வீரர் ரூத் 6-3, 6-7 (5-7), 6-3, 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் தரவரிசையில் இல்லாத ஆஸ்திரேலியாவின் புருசலை 3:50 மணிநேரம் போராடி வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஸ்ட்ரப் 3:21 மணி நேரம் : 
ஜெர்மனி நாட்டின் முன்னணி வீரரும், உலகத் தரவரிசையில் 24-ஆவது இடத்தில் இருப்பவருமான ஸ்ட்ரப் 4-6, 6-1, 6-7 (5-7), 6-1, 6-7 (9-11) என்ற செட் கணக்கில், தரவரிசையில் இல்லாத செர்பியாவின் மியோமிரிடம் வீழ்ந்தார்.

அல்காரஸ் 3:21 மணி நேரம் :
உலகத் தரவரிசையில் இரண்டா வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ் இத்தாலியின் சோனேகோ வை எதிர்கொண்டார். அல்காரஸின் அதிரடியை மிக எளிதாக சோனேகோ எதிர்கொண்டதால் இந்த ஆட்டம் 3:21 மணி நேரம் நீண்ட நிலையில், இறுதி யில் அல்காரஸ் 6-4, 7-6 (7-3), 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

அமெரிக்காவின் பெகுலா அதிர்ச்சி தோல்வி

வியாழனன்று நடைபெற்ற மக ளிர் 2-ஆம் சுற்று ஆட்டத்தில்  உலக தரவரிசையில் 5-ஆம் இடத்தில் இருப்பவரும், அமெரிக்க நட்சத்திரமுமான ஜெசிக்கா பெகுலா, தரவரிசை யில் இல்லாத பிரான்சின் கிளாரா புளுரெலை எதிர்கொண்டார். அதிக பவுலால் பெகுலா திணற கிளாரா 6-4, 6-2 என்ற செட் கணக் கில் வெற்றி பெற்று 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

ஸ்வியாடெக் (போலந்து), ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி), கலின்ஸ்கியா (ரஷ்யா), ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா).

போபண்ணா ஜோடி  அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஒபனில் இந்தியாவின் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் எப்டன் உடன் ஜோடி சேர்ந்து களமிறங்கி யுள்ள நிலையில், தனது முதல் சுற்று ஆட்டத்தில் போபண்ணா - எப்டன் ஜோடி ஆஸ்திரேலியாவின் மார்க் - ஜேம்ஸ் ஜோடி யை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போபண்ணா - எப்டன் ஜோடி 7-6 (7-5), 4-6,  6-7 (2-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.