games

img

விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் 27 ரன்களில் ஆட்டமிழப்பு மேற்கு இந்தியத் தீவுகள் அணி அவசர ஆலோசனை

மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 3 போட்டி யிலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றி யது. குறிப்பாக 3ஆவது போட்டியில் 176 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி யை சந்தித்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் வெறும் 27 ரன்களில் ஆட்ட மிழந்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சி யில் ஆழ்த்தியது. இந்நிலையில், அணியின் செயல் திறனை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்குமாறு புகழ்மிக்க சாதனையாளர்களான கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் பிரையன் லாராவிற்கு மேற்கு இந்தியத் தீவுகளின் நிர்வாகம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ள அணியை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்க வேண்டும் என மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் கிஷோர் ஷாலோ முன்னாள் வீரர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ், ஷிவ்நாராயண் சந்தர்பால், இயன் பிராத்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  கிரிக்கெட் உலகில் ஒரு காலத்தில் முடிசூடா மன்னனாக இருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, தற்போது அறிமுக அணியைப் போன்று விளை யாடி வருகிறது. இதற்கு அணியின் கட்ட மைப்பு காரணம் அல்ல. டி-20 தொடர்களின் ஆதிக்கம் தான். முன்னணி வீரர்கள் பணத்திற்கு ஆசைப் பட்டு, நாட்டிற்கு விளையாடாமல் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி-20 தொடர் களில் விளையாடி வருகின்றனர். இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி சுக்குநூறாக நொறுங்கியுள்ளது.

ஸ்டார்க்கிடம் வம்பு இழுத்ததும் ஒரு காரணம் 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஸ்டார்க் தங்க முட்டையுடன்  (0 ரன்கள்) மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் சீல்ஸ் பந்துவீச்சில் ஆட்ட மிழந்தார். அப்பொழுது ஸ்டார்க்கை, சீல்ஸ் ஸ்லெட்ஜிங் செய்தார். இதனை அப்பொழுது கண்டுகொள்ளாத ஸ்டார்க், இரண்டாவது இன்னிங்சில் அசூர வேகத்தில் பந்துவீசினார். ஸ்டார்க்கின் மிரட்டலான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 27 ரன்களில் சுருண்டது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் இந்த மோசமான சாதனைக்கு ஸ்டார்க்கிடம் வம்பு இழுத்ததும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.