games

img

விளையாட்டு

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல்
தங்கம் வென்றார் தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாலறிவன்

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டை  சேர்ந்த இளவேனில் வாலறிவன் களமிறங்கினார். தொடக்கம் முதலே அசத்தலாக விளையாடிய இளவேனில் இறுதிச்சுற்றில் 252.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். 251.9 புள்ளிகளுடன் பிரான்சின் ஓசியான் முல்லர் வெள்ளிப்பதக்கத்தையும், 229 புள்ளிகளுடன் சீனாவின் ஜியாலே ஜாங் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். நடப்பு சீசன் உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் தொடரில் இந்திய அணியின் பதக்க வேட்டையை துவக்கிவைத்துள்ள தமிழ்நாட்டின் இளவேனில் வாலறிவனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

டைமண்ட் லீக் இறுதிப் போட்டி
நீரஜ் சோப்ராவிற்கு வெள்ளிப்பதக்கம்

அமெரிக்காவின் யூஜினில் டையமண்ட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவின் இறுதிச் சுற்று ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயி றன்று அதிகாலை நடைபெற்றது.  இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஒலிம்பிக் தங்கநாயகனான நீரஜ் சோப்ரா 0.44 மீ வித்தியாசத்தில் நூலிழை யில் தங்கப்பதக்கத்தை நழுவவிட்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா 83.80 மீட்டர் தூரம் ஈட்டிஎறிந்த நிலையில், செக்  குடியரசு நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ஜக்குப்  வட்லெஜ்ச் 84.24 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி  எறிந்து தங்கப்பதக்கமும், பின்லாந்தின் ஆலிவர் ஹெலண்டர் 83.74 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் வெண்கலப்பதக்கம் வென்ற பின்லாந்தின் ஆலிவர் ஹெல ண்டர் வெறும் 0.6 மீ அளவில் நீரஜ் சோப்ராவிடம் வெள்ளிப்பதக்கத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு தனி நபரின் கையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சிக்கியுள்ளது

அமித் ஷா மகனை மறைமுக சாடிய இலங்கையின் அர்ஜுனா ரணதுங்கா

கிரிக்கெட் உலகில் பணக்கார கிரிக் கெட் வாரியமாக இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு தனி நபரின் கை யில் சிக்கியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விரிவாக கூறிய தாவது, “இந்திய அணியின் முன்னாள் வாரியத் தலைவர்கள் சரத்பவாரும் (தேசிய வாத காங்கிரஸ் மூத்த தலைவர்), டால்மியா வும் (முன்னாள் கொல்கத்தா கிரிக்கெட்  வாரியத் தலைவர்) கிரிக்கெட் விளை யாட்டில் கவனம் செலுத்தினர். அவர்களு க்கு ஓரளவு அறிவும் பண்பும் இருந்தது. ஆனால் தற்போது அப்படியல்ல. இந்திய கிரிக்கெட் வாரியம் எதேச்சதிகாரப்போக்கு டன் நடந்துவருகிறது. ஒரு அணிக்காக விதிகளை (ஆசியக்கோப்பை மாற்றம் உள்ளிட்ட சில விதிகள்) மாற்றியது குறித்து இலங்கை உள்ளிட்ட மற்ற எந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும் கண்டிக்காதது வேத னையளிக்கிறது. முக்கியமாக ஒரு தனிப் பட்ட நபரின் விருப்பத்திற்காக ஆசியக் கோப்பை போட்டிகளில் மாற்றம் செய்ய முடியும் என்றால், இந்தியா - பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கு முன் ஐசிசி விதிகளை மாற்றினால் கூட நான் ஆச்சரி யப்பட மாட்டேன். அவர்கள் அப்படிச் செய்தா லும் அதற்கு வாயை மூடிக்கொண்டு “சரி” என்று தலையாட்டும் அமைப்பாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் மாறியுள்ளது” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.யார்  அந்த தனிநபர்?

யார்  அந்த தனிநபர்?

இலங்கையின் அர்ஜுனா ரணதுங்கா குறிப்பிட்ட அந்த தனிநபர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளருமான ஜெய் ஷா தான். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரோஜர் பின்னி இருந்தாலும், அவர் பெயரளவில் மட்டுமே தலைவராக உள்ளார். ஜெய் ஷா தான் அனைத்து முடிவுகளையும் எடுத்து, அனைத்து உத்தரவுகளையும் விதித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். தனது தந்தை உள்துறை அமைச்சகராகவும், பிரதமர் மோடியின் முக்கிய கைப்பாவையாகவும் இருப்பதாலும் ஜெய் ஷாவின் ஆட்டத்தின் படியே பிசிசிஐ ஆடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.