games

img

ஐபிஎல் - 2023 - இன்றைய ஆட்டங்கள்

நடப்பு சீசனில் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் சென்னை அணி தனது 10-வது லீக் ஆட்டத் திற்கு மேல் தொடர் வெற்றியை குவிக்க முடி யாமல் திணறி வருகிறது. இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி சென்னை அணி 7 வெற்றி, ஒரு டை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் இருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற சனியன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் தில்லி அணியை கட்டாயம் வீழ்த்த வேண்டும். அவ்வாறு வீழ்த்தினால் 17 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு எளிதாக முன்னேறும். இல்லையென்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சென்னை அணி எதிர்பார்த்து அதிர்ஷ்ட வாய்ப்புடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நிலை ஏற்படலாம்.  பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப் பில் சென்னை அணியும், பிளே ஆப் சுற்று ஏற்கெனவே பறிபோனாலும் சொந்த மைதா னத்தில் ஆறுதல் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் தில்லி அணியும் என இரு  அணிகளும் வெற்றியின் மீது குறியாக கள மிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப் பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோல்வி என்றால் இடியாப்ப சிக்கல்தான்

சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றியை ருசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சென்னை அணி தில்லியை வீழ்த்தினால் எளிதாக புள்ளிப்பட்டியலில் அதே 2-வது இட அந்தஸ்துடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். தில்லி அணியிடம் வீழ்ந்தால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே சென்னை அணியின் பிளே ஆப் சுற்று கனவு நனவாகும்.

சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி

1. மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத்திடம் தோல்வி அடைய வேண்டும்
2. லக்னோ அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி அடைய வேண்டும்
3. பெங்களூரு அணி தனது கடைசி லீக் (குஜராத்) ஆட்டங்களில் தோல்வி அடைய வேண்டும்
4. மும்பை, பெங்களூரு அணிகள் தோல்வி மட்டுமே சென்னை அணிக்கு போதுமானது. லக்னோ அணியின் வெற்றி, தோல்வி சென்னை அணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. காரணம் சென்னை, லக்னோ அணிகள் ஒரே புள்ளியில் (15) இருப்பதால் ரன் ரேட் அடிப்படையில் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
5. இவ்வாறு நடந்தால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இவ்வளவு பெரிய இடியாப்ப சிக்கலை எதிர்கொள்வதற்கு, சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தில்லியை வீழ்த்துவதே நல்லது. 

சென்னை - தில்லி
இடம் : தில்லி மைதானம்
நேரம் : மதியம் 3:30 மணி

கொல்கத்தா - லக்னோ
இடம் : ஈடன் கார்டன், கொல்கத்தா
நேரம் : இரவு 7:30 மணி

சேனல் : சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  (தொலைக்காட்சி),  ஜியோ சினிமா (ஒடிடி)
 

;