11-வது உலகக்கோப்பை ஆஸ்திரேலியா, நியூஸி லாந்து நாடுகளில் கூட்டாக 2015-இல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற்றது. இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கி லாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு அமீரகம் என 14 அணிகள் களமிறங்கின. அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுடன் கிரிக்கெட் உலகில் மிகவும் பலம்வாய்ந்த அணியான இங்கிலாந்து அணியும் லீக் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தது. சிறிய அணியான வங்கதேசம் இங்கிலாந்தைவெளியேற்றியது. காலிறுதி ஆட்டங்களில் இந்தியா வங்கதேசத்தையும், தென் ஆப்பிரிக்கா இலங்கையையும், நியூஸிலாந்து மேற்கு இந்தியத் தீவுகளையும், ஆஸ்திரேலியா பாகிஸ்தானையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின. உலகக்கோப்பையில் தனது ஆதிக்க வெற்றிநடைக்கு 2011 சீசனில் முற்றுப்புள்ளி வைத்த இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்பை எதிர்நோக்கிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிட்டியது. இந்த வாய்ப்பில் இந்திய அணியை எளிதாக வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.
தோல்வியை கொண்டாடிய தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள்
கிரிக்கெட் உலகின் அபாயகரமான அணி என்ற பெயர் ஒருபக்கம் இருந்தாலும், இதுவரை உலகக்கோப்பை வென்றதில்லை என்ற ஏக்கத்தை துடைத்தெறிய சூப்பர் பார்மில் விளையாடிவந்த தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றி வாய்ப்பை மீண்டும் மழை காவு வாங்கியது. மழை யால் ஓவர் குறைக்கப்பட்டது நியூஸிலாந்து அணிக்கு சாதகமாக நிறைவடைய, தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி இறுதிக்கு முன்னேறியது. எதிர்பாராத தோல்வியால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு கதறினர். இதனை கண்டு மனமிறங்கிய அந்நாட்டு ரசிகர்கள் வீரர்களுக்கு ஆதரவாக களமிறங்கி, அரையிறுதி வரை முன்னேறி யதை வெற்றி கொண்டாட்டமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகள் மோதிய இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 45 ஓவர் களில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 33.1 ஓவரில் 3 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை எளிதாக எட்டி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.