games

img

டி20 உலகக் கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் தொடர் 16.7 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை  

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி 16.7 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் கடந்த 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லீக் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகிறது.

டி20 உலகக்கோப்பை போட்டிகள் சமூக வலைத்தளம் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை  பற்றிய விவரங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் தகுதி சுற்று மற்றும் நேற்று வரை நடந்த லீக் சுற்றின் போட்டிகளின் முடிவில் 23.8  கோடி பார்வையாளர்களைக் கடந்து இந்த டி20 உலகக்கோப்பை தொடர் சாதனை படைத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாகக் கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி 16.7 கோடி  பார்வையாளர்களால் கண்டு ரசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2016 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டமே ஒரு தனிப்பட்ட 20 ஓவர் போட்டிக்கு அதிக பார்வையாளர்களைப்  பெற்று இருந்த போட்டியாக இருந்தது. 13.6 கோடி  பார்வையாளர்களைப் பெற்று இருந்த அந்த போட்டியின் சாதனையைக் கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டி முறியடித்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

;