games

img

டி-20 உலகக்கோப்பை - ஸ்பெஷல் மேற்கு இந்தியத் தீவுகள்

2 முறை டி-20 உலகக்கோப்பை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி (2012,2016) வரவிருக்கும் 8-வது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரில் 2-ஆம் தர அணியாக களமிறங்குகிறது. காரணம் அணியில் உள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அணியில் நிக்கோலஸ் பூரான், லெவிஸ், ஜேசன் ஹோல்டர், ஷெல்டன் கோட்ரெல், அல்ஜாரி ஜோசப், ஓடியன் ஸ்மித் ஆகிய 6 பேர் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு ஓரளவு அறிமுகமான (தெரிந்த) வீரர்கள்.  மற்ற 9 வீரர்களின் ஆட்டத்திறன், பார்ம் பற்றி எதுவும் சரியாக தெரியாது. அதனால் டி-20 உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பலம், பலவீனம் பற்றி எதுவும் கூற முடியாது. மொத்தத்தில் ஒரு உலகசாம்பியன் போன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி இல்லை என்று தான் கூற வேண்டும். இளம்படையுடன் களமிறங்குவதால் அதிர்ச்சி சம்பவங்கள் மூலம் கோப்பையை பற்றி சிந்திக்க முடியும்.  இலங்கை அணியைப் போல தகுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்தி அதன் பின்னரே “சூப்பர் 12” சுற்றுக்கு தகுதி பெறும் என்ற இடியாப்ப சிக்கல் வேறு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு உள்ளது. முக்கியமான நட்சத்திர வீரர்கள் சிலரே இருப்பதால் டி-20 உலகக்கோப்பையில் அதிகமுறை பட்டம்(2) வென்ற என்ற பெருமையுடன் களமிறங்கும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி என்ன செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வீரர்கள் விபரம்

கேப்டன் : நிகோலஸ் பூரான் (பேட்டிங், கீப்பர்)
பேட்டிங் : ரோவ்மேன் பவல், எவின் லெவிஸ், சாம்ரா ப்ரூக்ஸ், பிரண்டன் கிங்
விக்கெட் கீப்பர் : ஜான்சன் சார்லஸ்
ஆல்ரவுண்டர் : ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ், யானிக் காரியா, ரைமான் ரெய்பர்
பந்துவீச்சு : ஷெல்டன் காட்ரெல், அகில் ஹொசைன், அல்ஸாரி ஜோசப், ஒபேட் மெக்காய், ஓடியன் ஸ்மித்.