games

img

தமிழரான மேக்ஸ்வெல் மனைவிக்கு குவியும் ஆதரவு

நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடர் முழுவதும் நன்றாக விளையாடிய இந்திய அணி இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்து உலகக்கோப்பையை பறிகொடுத்தது. 

இந்த தோல்வியின் எதிரொலியால் இந்திய ரசிகர்கள் பல்வேறு  விரும்பத் தகாத விஷயங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். அதில்  முக்கியமானது ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி வீரரான மேக்ஸ்வெல் (35)  மனைவி வினி ராமனுக்கு இந்திய ரசிகர்கள் வெறுக்கத்தக்க மெசேஜ் களை அனுப்பியுள்ளனர். 

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட வினி ராமன் இந்த விவகாரத்தை வெளிப் படையாக குற்றம்சாட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,”இதை சொல்ல வேண்டியதற்கான தேவை எழுந்திருப்பதை நம்ப முடியவில்லை. நீங்கள் பிறந்து, வளர்ந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதேசமயம், உங்களின் குழந்தைக்கு தந்தையாக இருக்கும் உங்கள் கண வர் விளையாடும் அணியையும் ஆத ரிக்க வேண்டும். உங்களின் சீற்றத்தை உலகில் நிகழும் முக்கியமான பிரச்ச னைகளை நோக்கி திருப்புங்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு-ஆஸ்திரேலிய ரசிகர்கள்
மேக்ஸ்வெல் மனைவி வினி ராமனுக்கு ஆதரவாக தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் “நாங்கள் இருக்கிறோம். நாட்டில் சிலர் இப்படி தான். ஆனால் ஒட்டுமொத்த நாடே உங்களை இப்படி வசைபாடவில்லை” என பல்வேறு கருத்துக்களுடன் ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர். 

தமிழ் மொழி தெரியாது என்றா லும் சமூக வலைத்தளங்களில் உள்ள மொழிபெயர்ப்பு வசதி மூலம் தமிழ்நாட்டு மக்களின் கருத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலிய ரசிகர்களும் குரல் எழுப்பியுள்ளனர். நாடு கடந்து இரண்டு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒரு பெண்ணிற்காக ஆதரவு மழையில் ஒன்றிணைந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.