games

img

விளையாட்டு - புரோ கபடி லீக் தொடர் குஜராத் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாட்னா

புரோ கபடி லீக் தொடர்
குஜராத் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாட்னா

குறுகிய காலத்தில் பிரபல மடைந்துள்ள புரோ கபடி லீக் தொடரின் 10-ஆவது சீசன் கடந்த வாரம் தொங்கியது. தற்போது இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இருந்தே அபார ஆட்டத்தை வெளிபடுத்தி வரும் குஜராத் அணி, ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலை யில், வியாழனன்று தனது 4-ஆவது லீக் ஆட்டத்தில் பாட்னா அணியை எதிர்கொண்டது.  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா அணி 33-30 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி குஜராத் அணியின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பாட்னா  அணியை விட குஜராத் அணியில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் இருந்தா லும், அசத்தலான, புத்திக்கூர்மையான ஆட்டத்தால் குஜராத்தை பந்தாடி யுள்ளது பாட்னா. 3 முறை சாம்பியன் வென்ற அணி யான பாட்னா மீண்டும் சூப்பர் பார்மில் நுழைந்து இருப்பது அந்த அணி ரசிகர் களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பெங்களூரு - ஹரியானா
(14-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

இன்றைய ஆட்டங்கள்

இரண்டு ஆட்டங்களும் : கண்டிவீரா மைதானம்,பெங்களூரு, கர்நாடகா

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (மொழி வரிசைகள்) ஹாட் ஸ்டார்  ஓடிடி - சந்தா தொகை இருந்தால் மட்டுமே

உ.பி. யோதாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ்
(15-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி

ஐபிஎல் போன்று கோடிகளில் புரளும் புரோ கபடி அணிகள்

புரோ கபடி தொடரின் 10-ஆவது சீசனில் மொத்தம் 12 அணி கள் விளையாடி வருகிறது. ஐபிஎல் தொடரை போன்று மாறியுள்ள புரோ  கபடி லீக் தொடர் வீரர்களின் ஏல நடை முறைக்கு மாறியுள்ள நிலையில், 12 அணிகளின் உரிமையாளர்கள் மிகப் பெரிய தொழிலதிபர்களாக இருப்ப தால் ஒவ்வொரு அணியின் மதிப்பு ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.

அணி  - உரிமையாளர்கள்

  1.     தமிழ் தலைவாஸ் -  மேக்னம் ஸ்போர்ட்ஸ் (தெலுங்கானாவில் உள்ள நிறுவனம்)
  2.  குஜராத் ஜெயன்ட்ஸ் - அதானி வில்மர் (குஜராத்தை மையமாக கொண்ட பன்னாட்டு நிறுவனம்)
  3.  பெங்களூரு புல்ஸ் - டபிள்யு எல் நிறுவனம் (தெலுங்கானாவில் உள்ள நிறுவனம்)
  4.  தபாங் தில்லி - ராதா கபூர் கண்ணா (விளையாட்டு ஆர்வலர்)
  5.  ஹரியானா ஸ்டிலர்ஸ் - ஜேஎஸ் டபிள்யு (மகாராஷ்டிராவை மையமாக கொண்ட பன்னாட்டுநிறுவனம்)
  6.  ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - அபிஷேக் பச்சன் (நடிகர்)
  7.      பாட்னா பைரேட்ஸ் - வி ஷா (பஜாஜ்குழுமம் - முகுந்த் லிமிடேட்)
  8.      புனேரி பால்டன் - இன்சூரேகோட் (புனேவை மையமாகக் கொண்ட விளையாட்டு நிறுவனம்)
  9.      தெலுங்கு டைட்டன்ஸ் - வீரா ஸ்போர்ட்ஸ் (விளையாட்டு நிறுவனம்)
  10.      யு மும்பா - யூனிலேசர் வென்ச்சர்ஸ் (மும்பையை தலைமையிடமாக கொண்ட நிறுவனம்)
  11.      உ.பி.யோதாஸ் - ஜிஎம்ஆர் குரூப்ஸ் (மும்பையை தலைமையிடமாக கொண்ட பன்னாட்டு நிறுவனம்)
  12.      பெங்கால் வாரியர்ஸ் - காப்ரி ஸ்போர்ட்ஸ் (கொல்கத்தாவைச் சேர்ந்த விளையாட்டு நிறுவனம்)மேற்குறிப்பிட்ட 12 அணிகளில் 3-க்கும் மேற்பட்ட அணிகளுக்கு கிரிக்கெட், கால்பந்து லீக் அணிகளையும் விலைக்கு வாங்கி கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விளையாட்டிலும் கல்லா கட்டும் அதானி

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், தொழிலதிபருமான கவுதம் அதானி மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் டாப் கியரில் உலகின் முதன்மையான பணக்காரராக உருவெடுத்துள்ளார். நிலக்கரி சுரங்கம், துறைமுகம், பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் அதானி தற்போது விளையாட்டு நிறுவனங்களிலும் காலடி வைத்தார். சமீபத்தில் அயல்நாட்டு டி-20 லீக் அணியை அதானி வாங்கிய நிலையில், தற்பொழுது புரோ கபடி லீக் தொடரில் குஜராத் அணியை வாங்கியுள்ளார் அதானி. அதானியின் துணை நிறுவனமான அதானி வில்மர் குஜராத் அணியை கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
.