games

img

ஐபிஎல் 2022: மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான் அணி    

ஐபிஎல் 2022 மும்பைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

ஐபிஎல் 15வது கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்ற மும்பை-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.    

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். பசில் தம்பி வீசிய 4-வது ஓவரில் பட்லர், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்தார். படிக்கல் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பவர்பிளேயில் ராஜஸ்தான் அணி, 2 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது.

32 பந்துகளில் பட்லர் அரை சதமடித்தார். 10 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது.  சஞ்சு சாம்சன், 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பொலார்ட் வீசிய 17ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் எடுத்தார். பட்லரும் ஹெட்மையரும் 22 பந்துகளில் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள்.  

இதில் சிறப்பாக விளையாடிய பட்லர், 66 பந்துகளில் 5 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார். ஹெட்மையர்  14 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹெட்மையர், பட்லரின் விக்கெட்டுகளை எடுத்த பும்ரா இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 15 பந்துகளில் ராஜஸ்தான் அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 200 ரன்கள் எடுக்க முடியாமல் போனது.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா, டைமல் மில்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். பின்னர் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.  

மும்பை அணியில் அதிசபட்சமாக இஷான் கிஷன் 53, திலக் வர்மா 61 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் தரப்பில் சஹல், நவ்தீப் சைனி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.