tamilnadu

img

ராஜஸ்தான் அணி பயிற்சியாளராக ஆன்ட்ரூ பேரி நியமனம்

ஐபிஎல்

கிரிக்கெட் உலகின் முன்னணி உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியாக வலம்  வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சி யாளராக ஆஸ்தி ரேலிய அணி யின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரூ பேரி மெக்டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த 3 ஆண்டுகளுக்கு ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராகச் செயல்படவிருக் கும் ஆன்ட்ரூ 2009-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தில்லி அணிக்காக விளையாடியுள்ளார். தொடர்ந்து பெங்களூரு அணிக்கு (2012-13) பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.  ஆஸ்திரேலிய அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ள ஆன்ட்ரூ முதல் தரப் போட்டிகளில் நல்ல அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.