games

img

விளையாட்டு செய்திகள்

ஹர்திக் பாண்டியாவிற்கு ஒத்துழைக்க வீரர்கள் மறுப்பு
ஒற்றுமை இல்லாத சூழலால் விழி பிதுங்கும் மும்பை

ஐபிஎல் தொடரில் சென்னை அணியை போன்று நட்சத்திர அணியாக வலம் வரும் 5 முறை சாம்பியனான மும்பை அணி, நடப்பு சீசனில் விமர்சிக்க கூட முடியாத அளவிற்கு மிக மோசமான அளவில் விளையாடி வருகிறது. இதுவரை மும்பை அணி 8 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 5 போட்டிகளில் படுதோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7-ஆவது இடத்தில் பின்தங்கி உள்ளது.
பலமான வீரர்களை பெற்றிருந்தாலும் மும்பை அணி நடப்பு சீசனில் திணறுவதற்கு ஹர்திக் பாண்டியாவும், மும்பை அணி நிர்வாகமும்தான் காரணம். இதற்கான காரணங்கள்: 

1. கேப்டன் பதவி அளித்தால் மட்டுமே மும்பை அணிக்கு வருவேன் என அடம்பிடித்த ஹர்திக் பாண்டியா விற்காக 5 முறை கோப்பையை பெற்றுக்கொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது.

2.    வீரர்களுடன் நல்ல அணுகு முறையை கொண்ட ரோஹித் சர்மாவிற்கு துணை கேப்டன் பதவி கூட அளிக்காமல் ஓரங்கட்டியது.

3.    இந்திய அணியின் கேப்டன் என்று கூட பாராமல் அவரை முன்களத்தில் நிற்க வைக்காமல் ஹர்திக் பாண்டியா பவுண்டரி எல்லைக் கோட்டிற்கு அதிகார பார்வையுடன் அனுப்பியது மற்ற வீரர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இந்த ஒரு சம்பவத்தால் ஏற்கனவே கடுப்பில் இருந்த மும்பை வீரர்கள் ஹர்திக் பாண்டியாவை ஏதோ அண்டை நாட்டு வீரர் போல தரம் பிரிக்கும் மனநிலையில் அவரை கண்டுகொள்ளாமலும், ஆட்டத்தின் மீது ஆர்வம் இல்லாமலும் செயல்பட தொடங்கினர்.

4. ரோஹித் சர்மா நீக்கம் தொடர்பாக பயங்கர கோபத்தில் உள்ள மும்பை ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை மறைமுகமாகவும், நேரடியாகவும் மைதானத்திலேயே கிண்டல் செய்துவருகின்றனர். வீரர்களும் கண்டு
கொள்ளாததால் ஹர்திக் பாண்டியா மனஅழுத்தத்திற்கு இணையாக துவண்டு போயுள்ள நிலையில், கேப்டன் வியூகத்தில் அவர் மிக மோசமாக தடுமாறி வருகிறார்.

5. பயிற்சியாளராக உள்ள மார்க் பவுச்சர் (தென் ஆப்பிரிக்கா), மலிங்கா (இலங்கை), பொல்லார்ட் (மேற்கு இந்தியத் தீவுகள்) ஆகியோர் ஒற்றுமை இல்லாமல் உள்ளனர். அதாவது மார்க் பவுச்சர், மலிங்கா மற்ற அணிவீரர்களுக்கும், பொல்லார்ட் மட்டும் ஹர்திக் பாண்டியாவுக்கும் தனித்தனியாக ஆலோசனை அளித்து வருகின்றனர். இது அணியில் மிகப்பெரியபிளவு இருப்பதை வெளிப்படையாக காண்பிக்கிறது.

6.    கடைசியாக மும்பை அணியின் நிறுவனரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ரோஹித் உள்ளிட்ட சில வீரர்களை கண்டால்முறைக்கிறார். ஹர்திக் பாண்டியா உடன் மட்டுமே சிரிக்கிறார். அணி
யின் ஓனரே இப்படி இருக்கிறார் என வீரர்கள் கிசுகிசுத்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எப்பொழுது ஐபிஎல் முடியும் எனமும்பை அணி வீரர்கள் எதிர்பார்த்து உள்ளதாகவும் சமூக வலைத்தள விளையாட்டுச் செய்தி நிறு வனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.இவ்வாறு பல்வேறு பிரச்சனை களால் மும்பை அணி நடப்பு சீசனில் மிக மோசமான அளவில் தடுமாறி வருகிறது. இதனை மாற்றிக் கொண்டால்தான் பிளே ஆப் சுற்று பற்றி கனவாவது காண முடியும். இல்லை என்றால் லீக் சுற்றோடு நடையைக் கட்ட வேண்டியதுதான்.

;