இந்தியாவுக்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதல் 2 ஆட்டத்தில் இரு அணிகளும் ஆளுக்கொரு வெற்றி யுடன் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமனில் உள்ள நிலையில், சுற்றுப்பயணத்தின் இறுதி நிகழ்வான கடைசி டி-20 போட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் புதனன்று நடைபெறுகிறது. ஒருநாள் தொடரை இழந்த தற்கு டி-20 கோப்பை வென்று பதி லடி கொடுக்கும் முனைப்பில் நியூசி லாந்து அணியும், டி-20 தொடரையும் கைப்பற்றி நியூசிலாந்து அணியை வெறுங்கையோடு அனுப்ப இந்திய அணியும் என, இரு அணி களும் கோப்பை மீது குறியாக இருப்பதால் 3-வது டி-20 ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - நியூஸிலாந்து
நேரம் : இரவு 7 மணி
இடம் : அகமதாபாத்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்