games

img

லக்னோ மைதான பராமரிப்பாளர் பணி நீக்கம்

நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டி-20 போட்டி உத்தரப்பிர தேச தலைநகர் லக்னோவில் நடை பெற்றது. அவசரக்கோலத்தில் மைதானம் தயார் செய்யப்பட்டதால் பிட்ச் பகுதி 100% வித்தியாசமான, உயி ரோட்ட நிலைக்கு சென்றது. இதனால் இரு அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த, பேட்டர்கள் சிங்கிள் ரன் குவிக்க கூட முடியாமல் கடுமையாக போராடினர்.  லக்னோ ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்திய கிரிக்கெட் கேப்டன் ஹர்திக், நியூஸிலாந்து வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலர்  கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மைதான பராமரிப்பாளர் சுரேந்தர் குமார் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். புதிய பராமரிப்பாளராக சஞ்சீவ் குமார் அகர்வால்  நியமிக்கப் பட்டுள்ளார். 

பருந்துப் பார்வையில் லக்னோ அடல்பிகாரி வாஜ்பாய் மைதானம்.

;