games

img

ஐபிஎல் : ரன் குவிக்க கூடிய ஓவர்களை டெத் ஓவர்களாக மாற்றும் இந்திய இளம் வீரர்கள்

பெரும்பாலும் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் இந்த வீரர் அதிகம் குவித்தார், இந்த பந்துவீச்சாளர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார், இவர் அருமையாக கேட்ச் செய்தார் போன்றவைகளை பற்றியே அதிக பேச்சுக்கள் சாதனைகளாக பேசப்படும். இதுதான் வாடிக்கை.  ஆனால் நடப்பு சீசனில் இந்திய இளம் வீரர்கள் பல்வேறு வித்தியாசமான சாதனைகளை சத்தமில்லாமல் அரங்கேற்றி வருகின்றனர். இதில் முதன்மையானது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் பந்துவீச்சாளர்கள் போல ஹைதராபாத் வீரர் உம்ரான் மாலிக் விவேகம் கலந்த வேகத்துடன் பந்துவீசி  ஐபிஎல் தொடர மிரட்டி வருகிறார். மற்றோரு சாதனை என்னவென்றால் ரன் குவிக்கக்கூடிய கடைசி ஓவர்களை இந்திய இளம்வீரர்கள் எவ்வித முன் அனுபவம் இன்றி டெத் ஓவர்களாக (மெய்டன் கலந்த, ரன் குவிக்க முடியாத ஓவர்களாக) வீசி அசத்தி வருகின்றனர்.  

டெத் ஓவர்களை வீசுவதில் முதன்மையாக இருப்பவர் பெங்களூரு வீரர் ஹர்ஷல் படேல். வித்தியாசமான வியூகங்களுடன் மிரட்டல் வேகத்தில் பட்டையை கிளப்பி வருகிறார். இவரை சச்சின் தனிப்பட்ட முறையில் பாராட்டியுள்ளார். ஹர்ஷல் படேலை போலவே பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங், லக்னோ வீரர் ஆவேஸ் கான், ராஜஸ்தான் வீரர் பிரசீத் கிருஷ்ணா, ஹைதராபாத் வீரர்கள் உம்ரான் மாலிக், நடராஜன் (தமிழ்நாடு) ஆகியோரும் இறுதிக்கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்காமல் சிக்கனமாக பந்துவீசி வருகின்றனர். சரியான கணிப்புடன் மிகவும் கவனமாக பந்துவீசி வருவதால் இந்த 6 வீரர்களை கண்டால் எதிரணி வீரர்கள் சற்று கலக்கத்துடன் தான் பேட்டிங் செய்வார்கள்.  இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த 6 வீரர்களுக்கு முறையான பயிற்சி அளித்தால் அடுத்த தலைமுறைக்கான இந்திய அணியின் பந்துவீச்சாளர்களாக கிரிக்கெட் உலகை மிரட்டுவார்கள்.

காலம் மாறுகிறது 

பொதுவாக ஐபிஎல் தொடராக  இருந்தாலும், எவ்வித டி-20 தொடர்களாக இருந்தாலும் கடைசிகட்ட ஓவர்களில்  (16-20) குறைந்தபட்சம் 40 ரன்கள் விளாசுவார்கள். அதனால் கடைசி கட்ட ஓவர்களில் பந்துவீச்சாளர்கள் ரன் மிஷின்களை போல தான் இருப்பார்கள். இந்த நிலையை தற்போது இந்திய இளம் வீரர்கள் மாற்றியுள்ளனர். 
 

;