games

img

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.

ஒருநாள் போட்டி வடிவிலான 13ஆவது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்கேற்க உள்ளன.

இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி , முகமது சிராஜ், குல்தீப் யாதவ் பங்கேற்க உள்ளனர்.