games

img

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 2-ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 2-ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!

10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ஆம் தேதி நடக்க இருக்கிறது.

ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்க ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே போட்டி நிலவி வந்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைத் தொடருகிறது. ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணி 3-ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது. அதேவேளையில், ஆசியக் கோப்பையில் தொடர் வெற்றிகளைப் பெற்றுவரும் இந்திய அணி 2-ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்று நடைபெற உள்ள வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, அதேசமயம் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகத் தோல்வி அடைந்தால் இந்திய அணி நம்பர் 1 இடத்தை பிடித்துவிடும். மாறாக இவ்விரண்டு அணிகளும் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் முதலிடத்திற்கு முன்னேறும்.