games

img

விளையாட்டு

ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் இந்தியா புதிய வரலாறு ; வெண்கலம் வென்றார் ரமேஷ்

ஆசிய அலைச்சறுக்கு (சர்பிங்) சாம்பியன்ஷிப் போட்டி கள் சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், 7ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடவர் ஓபன் பிரிவில் இந்திய வீரர் ரமேஷ்  புதிஹால் (12.60 புள்ளிகள்) வெண்கலப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.  இதன் மூலம் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். மேலும் ஆசிய அளவிலான அலைச்சறுக்குப் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்வது  இதுவே முதல் முறையாகும். இந்த பிரிவில் தென்கொரியாவின் ஹீஜே (15.17 புள்ளிகள்) மற்றும்  இந்தோனேசியாவின் பஜார் அரியானா  (14.57 புள்ளிகள்) ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங் களை வென்றனர். அதே போல மகளிர் ஓபன் இறுதிப்  போட்டியில் ஜப்பானின் அன்ரி மாட்சுனோ 14.90 புள்ளிகளுடன் தங்கப்  பதக்கம் வென்றார். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் பிரிவில் தென் கொரியா வின் கனோவா 14.33 புள்ளிகளுடன் தங்கம் வென்ற அதே வேளையில், 18 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவில் சீனாவின் சிகி யாங் 14.50 புள்ளி களுடன் தங்கப் பதக்கம் கைப்பற்றி னார். இந்திய அலைச்சறுக்கு சம்மேள னத்தின் தலைவர் அருண் வாசு  கூறுகையில்,”ஆசிய சாம்பி யன்ஷிப்பில் இந்திய அலைச்சறுக்கு வீரர் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் மூவர்ணக் கொடியை ஆசிய சாம்பியன்ஷிப் மேடையில் ஏற்றிச் செல்வதைக் காண்பது இந்திய அலைச்சறுக்குக்கு பெருமையான தருணம்” எனக் கூறினார்.

இஸ்ரேலிய தாக்குதலில் “பாலஸ்தீன பீலே” படுகொலை

கால்பந்து உலகில் “பாலஸ் தீன பீலே” என அழைக்கப் படும் சுலைமான் அல்-ஒபெய்டு (பாலஸ்தீன கால்பந்து வீரர்) இஸ்ரே லிய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். தெற்கு காசாவில் மனிதாபிமான உத விக்காக காத்திருந்த மக்களை இஸ்ரே லியப் படைகள் குறிவைத்து நடத்திய தாக்குதலில், கடந்த புதன்கிழமை 41 வயதான சுலைமான் அல்-ஒபெய்டு கொல்லப்பட்டதாக பாலஸ்தீன கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. ஐரோப்பா இரங்கல் சுலைமான் மரணத்திற்கு ஐரோப்பா  கால்பந்து சங்கம் (யுஇஎப்ஏ) இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில், “பாலஸ்தீன பீலே சுலைமான் அல்-ஒபெய்டுக்கு பிரியா விடை. நெருக்கடி யான காலங்களிலும் கூட எண்ணற்ற குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்த திறமைசாலியாக இருந்தார்” என அதில் கூறப்பட்டுள்ளது. சுலைமான் அல்-ஒபெய்டு ஐரோப்பா மண்ணில் மற்றும் பிரபல சர்வதேச கிளப் அணிகளுக்காக விளையாடியது இல்லை. ஆனால் பாலஸ்தீன அணிக்காகவும், சாதாரண உள்ளூர் கிளப் அணிகளுக்காகவும் விளையாடினார். குறிப்பாக போர்  உள்ளிட்ட நெருக்கடியான காலங்களி லும், கால்பந்து விளையாட்டு மூலம் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு அளிக்கும் விஷயமாகவும், பாலஸ்  தீனத்தை பிரபல கால்பந்து அணியாக உருவெடுக்க மிக கடுமையாக போராடி னார். குழந்தைகளுக்கும், சிறுவர் களுக்கு செலவின்றி பயிற்சி அளித்தார்.  இதன்காரணமாகவே கறுப்பின மக்க ளுக்காக கால்பந்து மூலம் போராடிய மறைந்த பிரேசில் வீரர் பீலேவின் அடைமொழியோடு “பாலஸ்தீன பீலே” என சுலைமான் அல்-ஒபெய்டு அழைக்கப்படுகிறார்.  சாலா சரமாரி கேள்வி கால்பந்து உலகின் எகிப்திய அரசின் என அழைக்கப்படும் முகமது  சாலா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்  “சுலைமான் அல்-ஒபெய்டு எப்படி, எங்கு, எதனால் இறந்தார் என்று எங்களுக்குக் கூற முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். அதே போல  உலகம் முழுவதும் இந்த விவகாரம் முக்கிய செய்தியாக வலம் வருகிறது. கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் இது குறித்து விவாதமும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.