games

img

விளையாட்டு...

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்
இறுதியில் ஸ்வியாடெக்

களிமண் தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது அரையிறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையும், போலந்து நட்சத்திரமு மான ஸ்வியாடெக், உலக தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள பிரேசிலின் மாயாவை எதிர்கொண்டார்.  தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் ஸ்வியாடெக் எளிதாக கைப்பற்ற, 2-வது சுற்றில் மாயா அதிரடியாக விளையாடி புள்ளிகள் குவிக்க ஆரம்பித்தார். சற்று சுதாரித்துக்கொண்ட ஸ்வியாடெக்கும் அதிரடியில் இறங்க ஆட்டம் சூடுபிடித்தது. இறுதியில் 7-6 (9-7) என்ற கணக்கில் 2-வது செட்டையும் கைப்பற்றி 6-2,  7-6 (9-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். 

 

இன்று இறுதி ஆட்டம் (மகளிர் ஒற்றையர் பிரிவு)

இகா ஸ்வியாடெக் (போலந்து) -  கரோலினா முசோவா (செக்குடியரசு)
நேரம் : இந்திய நேரப்படி மாலை 6:30 மணி
சேனல் : சோனி டென், சோனி ஸ்போர்ட்ஸ் மற்றும் டென்னிஸ் டிவி
வெற்றியாளருக்கு பரிசுத்தொகை : ரூ. 20 கோடி (23 லட்சம் யூரோ)
2-ஆம் இடம் : ரூ. 10 கோடி (11 லட்சம் யூரோ)

 

ஹாட் ஸ்டாரிலும் இலவச சலுகை : கடும் அதிர்ச்சியில் அம்பானியின் ஜியோ சினிமா
ஆசிய கோப்பை, உலகக்கோப்பையை இலவசமாக காணலாம்

இந்திய ஒடிடி துறையில் முன்னணியில் இருக்கும் ஸ்டார் நிறுவனத்தின் ஹாட் ஸ்டார் டிஸ்னி + நிறுவனம் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரையும், அடுத்து வரவிருக்கும் ஆசியக்கோப்பை தொடரையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு அந்நிறுவன சாந்ததாரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான அம்பானி கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.  காரணம் இலவசம் மூலமாக தனது ஜியோ சினிமா ஒடிடி-யை வளர்க்க திட்டமிட்டு 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடர், ஐபிஎல் தொடரை இலவசமாக வழங்கினார் அம்பானி. அதே போல வரவிருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் இலவச திட்டம் அறிவித்து, கூடிய சீக்கிரம் இந்திய ஒடிடி துறையில் முன்னணி நிறுவனமாக வளர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், ஹாட் ஸ்டார் முந்திக்கொண்டு இலவச திட்டத்தை அறிவித்துள்ளது.  

ஹாட் ஸ்டாரின் இலவச திட்டம் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடியது. ஸ்மார்ட் டிவி மற்றும் இதர வகை திட்டங்களில் இலவசம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பலத்த அடி வாங்க போகும் அம்பானியின் ஜியோ சினிமா

இலவச திட்டங்கள் மூலமாக இந்தியாவில் வலுவான ஒடிடி நிறுவனமாக காலூன்ற முயற்சித்து கத்தார் உலகக்கோப்பை (2022), ஐபிஎல் சீசன் ஆகிய தொடர்களில் இலவச திட்டம் மூலம் ஓரளவு பிரபலமானது அம்பானியின் ஜியோ சினிமா. ஹாட் ஸ்டார், அமேசான், நெட்பிளிக்ஸ்  போன்று வேறு கட்டமைப்பு இல்லாததால் கத்தார் உலகக்கோப்பை (2022), ஐபிஎல் சீசன் முடிந்த உடனே ஸ்மார்ட்போன் பயனர்கள் ஜியோ சினி மாவை நீக்கிவிட்டனர்.  அதாவது ஜியோ சினி மாவை ஒரு இலவச பொருளாகவே ஸ்மார்ட் போன் பயனர்கள் பார்த்து வந்தனர். இது ஜியோ சினிமாவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அனைத்து கட்டமைப்பும் வைத்து இந்திய ஓடிடி துறையில் முதன்மையாக உள்ள ஹாட் ஸ்டாரும் இலவசமாக திட்டம் அறிவித்துள்ளது அம்பானியின் ஜியோ சினிமாவிற்கு பலத்த அடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

;