games

img

இந்திய கிரிக்கெட் அணியில் இருபாலருக்கும் சமஊதியம் : பிசிசிஐ அறிவிப்பு

இந்திய ஆடவர் அணிகளுக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பில், “டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ரூ.15 லட்சமும்,  ஒருநாள் போட்டிக்கு ரூ. 6 லட்சமும், டி-20 போட்டிக்கு ரூ.3 லட்சமும் ஊதியம் வழங்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் உலகில் பாலின பாகுபாட்டை களையும் வகையில் இது முதல் நடவடிக்கையாக இருக்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.