தொடரைக் கைப்பற்றுமா இந்தியா? இன்று 2-வது ஒருநாள் போட்டி
3 ஒருநாள், 5 டி-20 போட்டி களை கொண்ட தொடரில் பங் கேற்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத் தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வெள்ளியன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்ற நிலை யில், இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்., வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், 2-வது ஒருநாள் போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூ ரில் விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெறுகிறது. தொடரைக் கைப்பற் றும் முனைப்பில் இந்திய அணியும், பதி லடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரே லிய அணியும் என இரு அணிகளும் வெற்றி என்ற ஒரே குறிக்கோளுடன் களமிறங்குகிறது என்பதால் இந்தூர் ஒருநாள் போட்டி பரபரப்பாக நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா
நேரம் : மதியம் 1:30 மணி
இடம் : இந்தூர், மத்தியப் பிரதேசம்
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)
கொச்சி ஐஎஸ்எல் கால்பந்து இந்தியர் மீது இனவெறியுடன் நடந்து கொண்டாரா ஆஸ்திரேலிய வீரர்?
இந்திய கால்பந்து துறையை வளர்த்தெடுக்க இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஐஎஸ்எல் தொடர் வெள்ளி யன்று தொடங்கியது. தொடக்க ஆட் டத்தில் கேரள அணியும், பெங்களூரு அணியும் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் விரும் பத்தகாத சம்பவம் ஒன்று அரங்கேறி யுள்ளது. அது யாதெனில் பெங்களூரு அணியில் இடம்பற்றிருந்த ரியான் வில்லியம்ஸ் (ஆஸ்திரேலியா), கேரள அணியில் விளையாடி வரும் ஐபோன் டோங்லிங் (இந்தியா) இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த மோதலில் ஐபோன் டோங்லிங் பேசும் போது தனது வாயை ரியான் வில்லியம்ஸ் கையால் மூடினார். மேலும் ஐபோன் டோங்லிங்கை தள்ளி நின்று பேசும்படி கூறினார். ஆட்டம் முடிந்தவுடன் ஐபோன் டோங் லிங் ஐஎஸ்எல் நிர்வாகத்திடம் ரியான் வில்லியம்ஸ் மீது இனவெறி தாக்குதல் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொ டர்பாக ஐஎஸ்எல் நிர்வாகம் இன்னும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்ற நிலையில், ஐபோன் டோங்லிங் விளையாடி வரும் கேரளா அணி நிர்வா கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இனவெறி தாக்குதலாக எடுத்துக்கொள்ள முடியமா?
ஐஎஸ்எல் தொடர் உள்ளூர் தொடராகும். அனைத்து நாட்டு வீரர்களும் ஐஎஸ்எல் தொடரில் விளையாடி வருகின்றனர். ரியான் வில்லியம்ஸ் (ஆஸ்திரேலியா) - ஐபோன் டோங்லிங் (இந்தியா) இடையேயான மோதல் அவர்களுடைய தனிப்பட்ட மோதல் ஆகும். நாட்டை பற்றியோ, இனத்தை பற்றியோ ரியான் வில்லியம்ஸ் வெளிப்படையாக பேசவில்லை. கறுப்பின வீரர்களுக்கு குரங்கு போன்ற சைகையை வைத்து ஐரோப்பிய லீக் தொடர்களில் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் இந்தியர்களுக்கு அப்படி எதுவும் சைகை கிடையாது. இது தனிப்பட்ட வீரர்களின் மோதல். இனவெறி தாக்குதலாக எடுத்துக்கொள்ள முடியாது. எனினும் ரியான் வில்லியம்ஸ் செய்தது மிகவும் தவறான விஷயம் ஆகும்.
உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்தியா 2023
முதல் உலகக்கோப்பை - 1975
விளையாட்டு உலகில் முக்கிய விளை யாட்டாகவும், கால்பந்து விளையாட் டிற்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டா ளத்தை கொண்ட விளையாட்டாகவும் கிரிக்கெட் உள்ளது. இந்த கிரிக்கெட் விளையாட்டின் முக்கிய திருவிழாவாக இருப்பது 50 ஓவர் கொண்ட உலகக்கோப்பை ஆகும். 4 ஆண்டு களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் சீசன் 1975 ஜூன் 7 முதல் 21 வரை இங்கிலாந்து நாட்டில் நடை பெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸி லாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, கிழக்கு ஆப் பிரிக்கா என மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டன. கிழக்கு ஆப்பிரிக்கா அணியில் கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி குரூப் சுற்றோடு வெளியேறிய நிலையில், ஆஸ்திரேலிய அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் சாம்பியன் பட்டம் வென்று, கிரிக்கெட் உலகின் முதல் உலக சாம்பியன் பட்டம் வென்ற பெருமையைப் பெற்றது.