ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதல்
இந்தியாவில் நடைபெற்று வரும் 13-ஆவது சீசன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடுக்கட்டத்தை தாண்டியுள்ள நிலையில், வெள்ளி யன்று நடைபெறும் 34-ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இளம் அணியான ஆப்கானி ஸ்தான் ஜோனாதன் டிராட் (இங்கிலாந்து) பயிற்சியால் நடப்பு சீசன் உலகக்கோப்பை தொட ரில் வலுவான ஆட்டத்தை வெளிப் படுத்தி வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 6 ஆட்டங் களில் 3-இல் வெற்றியை ருசித்து 6 புள்ளி களுடன் 6-ஆவது இடத்தில் உள்ளது. முக்கியமாக ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்திய 3 அணிகளும் முன்னாள் சாம்பியன்கள் (இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை) என்ற நிலை யில், தனது 7-ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி 4-ஆவது வெற்றியுடன் 8 புள்ளி களுடன் டாப் 4-க்கு (ரன்ரேட் வாய்ப்பு இருந்தால்) முன்னேறும் முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது. அதே போல தென் ஆப்பிரிக்கா, வங்க தேசம் உள்ளிட்ட வலுவான அணி களை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தில் உள்ள நெதர்லா ந்து அணி தனது 7-ஆவது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 6 புள்ளிகளு டன் 5-ஆவது (ரன்ரேட் வாய்ப்பு இருந்தால்) இடத்திற்கு முன்னே றும் முனைப்பில் களமிறங்கு கிறது. எனவே இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்கு வதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படு கிறது.
ஆப்கானிஸ்தான் - நெதர்லாந்து
இடம் : ஏக்கானா மைதானம், லக்னோ, உ.பி.,
நேரம் : மதியம் 2:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஓடிடி - ஹாட்ஸ்டார்
(இலவசம் - ஸ்மார்ட்போன் மட்டும்.
ஸ்மார்ட் டிவிக்களில் பார்க்க சந்தா கட்டணம்)
+2.290
கிரிக்கெட் உலகில் அதிரடி க்கு பெயர் பெற்ற தென் ஆப்பிரிக்கா கடந்த காலங்களை போல் நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் ருத்ரதாண்டவம் ஆடி வரு கிறது. தனது 3-ஆவது லீக் ஆட்ட த்தில் இளம் அணியான நெதர்லாந்தி டம் தோல்விகண்ட பின் மிக மோச மான அளவில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முக்கிய மாக பேட்டிங்கில் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், பலம் வாய்ந்த அணி, பலம் குறைந்த அணி என எவ்வித பாகுபாடு இல்லாமல் 300 ரன்களுக்கு தொடர்ச்சியாக குவித்து வருவ தால் ரன்ரேட்டில் +2.290 புள்ளிகளை பெற்றுள்ளது. 300 ரன்களுக்கு குவிப்பது மட்டுமின்றி, எதிரணி களை 200 ரன்களுக்குள் சுருட்டும் அளவிற்கு பந்துவீச்சு அம்சமும் இருப்பதால் தென் ஆப்பிரிக்கா இம் முறை கண்டிப்பாக கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம்
நடப்பு சாம்பியனான இங்கி லாந்து அணி 13-ஆவது சீசன் உல கக்கோப்பையில் கடுமையாக திணறி வருகிறது. பலம் வாய்ந்த வீரர்கள் அனை வரும் அணியில் இருந்தும், இங்கி லாந்து அணி வெளியேறும் சூழலில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் நியூஸி லாந்து அணியிடம் இங்கிலாந்து அணி படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு தனது 2-ஆவது லீக் ஆட்டத்தில் இங்கி லாந்து வங்கதேசத்தை வீழ்த்தியது. இதனால் பார்முக்கு வந்துவிட்டோம் என்று செருக்காக விளையாடி அடுத்து நடைபெற்ற 4 ஆட்டங்களிலும் படுதோல்வியை சந்தித்து தற்போது விமான நிலையம் செல்ல தயாராக உள்ளது. நியூஸிலாந்து அணியிடம் தோல்விகண்ட பொழுதே எந்த இடத்தில் சொதப்பினோம், எதனால் தோற் றோம், இதற்கு என்ன தீர்வு ஆகிய மூன்று விஷயங்களை இங்கிலாந்து அணி ஆராயாமல் விட்டது தான் நடப்பு சீசன் உலகக்கோப்பையில் பலத்த அடிக்கு காரணம் ஆகும்.
வேண்டாம்
நடப்பு சீசன் உலகக்கோப்பை யில் எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு நன்றாக இருந்தது, அதனால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம், எங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு இல்லை அதனால் தான் தோல்வி கண் டோம் என பெரும்பாலான அணிகள் புலம்பி வரும் நிலையில், ஒரே ஒரு அணி ரசிகர்கள் ஆதரவை கண்டு கொள்ளாமல் ஆட்டத்தின் போக்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக விக்கெட் கொண்டாட்டம், சதமடித்த கொண்டாட்டம் ஆகிய வற்றை ஒரு அளவாகவே ஆஸ்தி ரேலிய வீரர்கள் கொண்டாடி வரு கின்றனர். இதற்கு ஒரு கிளைமேக்ஸ் உள்ளது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி தொடக்க ஆட்டங் களில் (2) சொதப்பி படுதோல்வியை சந்தித்தது. துவண்டு விழாமல் கோபத் தோடு அடுத்த 4 ஆட்டங்களில் பிரம் மாண்ட வெற்றியை குவித்து புள்ளிப் பட்டியலில் டாப் ஆர்டரில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.