இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-ஆவது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலத்தின் முக்கிய நகரான விசாகப்பட்டினத்தில் வெள்ளியன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து முதலில் களமிறங்கியது. ஜெய்ஷ்வாலின் (179) அபார சதத்தின் உதவியால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்துள்ளது. சனியன்று தொடர்ந்து 2-ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.