games

img

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று - உருகுவே அணியை வீழ்த்தி அர்ஜென்டினா அணி வெற்றி 

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் நேற்று உருகுவே அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில்  உருகுவே - அர்ஜென்டினா அணிகள் மோதின.  இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலேயே அர்ஜென்டினா அணியின் டி மரியா ஆட்டம் தொடங்கிய 7 -வது  நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என்று அர்ஜென்டினா அணி முன்னிலையில் தொடர்ந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும்  கோல் அடிக்கவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை  வீழ்த்தி அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

;