games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

நவம்பர் 20 முதல் 
டிசம்பர் 18 வரை

இன்றைய ஆட்டங்கள்

குரூப் “டி”

துனிசியா - ஆஸ்திரேலியா

நேரம்: மதியம் 3:30 மணி / இடம்: அல் ஜனுவப்

இரு அணிகளுக்கும் இது இரண்டாவது ஆட்டமாகும். முதல் ஆட்டத்தில் துனிசியா,டென்மார்க் அணியிடம் டிரா செய்தது. ஆஸ்திரேலியா முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது.

குரூப் “சி”

போலந்து - சவூதி அரேபியா

நேரம்: மாலை 6:30 மணி/ இடம்: எஜுகேஷன் சிட்டி

இரு அணிகளுக்கும் இது இரண்டாவது ஆட்டமாகும். முதல் ஆட்டத்தில் போலந்து, மெக்ஸிகோவிடம் டிரா செய்தது. சவூதி அரேபிய முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.

குரூப் “டி”

பிரான்ஸ் - டென்மார்க்

நேரம்: இரவு 9:30 மணி / இடம் : 974

இரு அணிகளுக்கும் இது இரண்டாவது ஆட்டமாகும். முதல் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியாவை புரட்டியெடுத்தது. டென்மார்க் தனது முதல் ஆட்டத்தில் துனிசியாவிடம் டிரா செய்தது.

குரூப் “சி”

அர்ஜெண்டினா - மெக்ஸிகோ

நேரம்: நள்ளிரவு 12:30 மணி
(ஞாயிறன்று அதிகாலை)  / இடம்: லுஸைல்

இரு அணிகளுக்கும் இது இரண்டாவது ஆட்டமாகும். முதல் ஆட்டத்தில் அர்ஜெண்டினா சவூதியிடம் வீழ்ந்தது. மெக்ஸிகோ தனது முதல் ஆட்டத்தில் போலந்திடம் டிரா செய்தது.

இன்றைய ஆட்டம் அர்ஜெண்டினாவுக்கு முக்கியம்!

2 முறை கோப்பை வென்ற அணியும், நடப்பு சீசனில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் அர்ஜெண்டினா அணி தனது முதல் ஆட்டத்தில் சவூதியிடம் வீழ்ந்தது. ஞாயிறன்று அதிகாலை நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் மெக்ஸிகோவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் அர்ஜெண்டினா அணிக்கு மிக முக்கியமானது ஆகும். இதில் வென்றால் மட்டுமே நாக் அவுட் சுற்று பற்றி அர்ஜெண்டினா யோசிக்க முடியும்.மெக்ஸிகோ அணி அபாயகரமான உலகின் தடுப்பாட்டத்தை கொண்ட அணியாகும். இந்த அணியை வீழ்த்தி, அடுத்த ஆட்டத்தில் போலந்து அணியை கண்டிப்பாக வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் அர்ஜெண்டினா உள்ளது. ஒரு ஆட்டத்தில் டிரா செய்தால் கூட, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி, புள்ளி களை எதிர்பார்க்கும் நிலைமை ஏற்படும் என்பதால் அர்ஜெண்டினா 2 ஆட்டத்திலும் வெற்றி பெறுவது நல்லது. குரூப் “சி” பிரிவில் சவூதி ஒரு வெற்றியுடன் முதல் இடத்தில் (3 புள்ளிகளுடன்) உள்ளது. போலந்து, மெக்ஸிகோ ஆகிய அணிகள் தனது முதல் ஆட்டத்தில் டிரா செய்து ஒரு புள்ளிகளுடன் 2 மற்றும் 3-வது இடத்தில் உள்ளது.

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி) இலவசமாக காணலாம்.
 

 

 

;