games

img

இதயங்களை வென்ற மாப்பே

அர்ஜெண்டினா கோப்பையை வென்ற வரலாற்று மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், ரசிகர்களின் இதயங்களை வென்றது பிரான்ஸ் இளம் வீரர் மாப்பேதான். 80-நிமிடம் ஆகிவிட்டது இனி எப்படி நாம் முன்னிலை கோலடிப்பது என்ற சிக்கலான, பதற்றமான நேரத்தில் ஒரே நிமிடத்தில் (80’ - பெனால்டி, 81 - டெக்னிக்கல் ஷாட்) அடுத்தடுத்து இரண்டு கோலடித்து அசத்தினார். மாப்பேவின் மிரட்டலால்தான் இறுதி ஆட்டம் 2-2 என்ற கணக்கில் பரபரப்புடன் கூடுதல் நிமிடமாக மாறியது. கூடுதல் நிமிடத்தில் மெஸ்ஸி (108’), பெனால்டி வாய்ப்பில் மீண்டும் கோலடித்து கால்பந்து உலகில் “ரத்த கொதிப்பை” ஏற்படுத்தி பெனால்டி சூட் அவுட் வரை அழைத்துச் சென்றார் மாப்பே. எனினும் பிரான்ஸ் வீரர்களின் சொதப்பல் மற்றும் அர்ஜெண்டினா கீப்பர் மார்ட்டீனஸின் கலக்கலான ஆட்டத்தால் மாப்பேவின் தனி நபர் போராட்டம் வீணாய் போனது. இருப்பினும் தனது துள்ளல் போராட்டத்தால் கால்பந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துச் சென்றார்.