games

img

விளையாட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தங்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனை இளவேனிலுக்கு குவியும் பாராட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய தொடரில் மகளிர் 10 மீ ஏர் ரைபிள் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாலறிவன் 253.6 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றார். இந்த பிரிவில் சீனாவின் சின்லு பெங் 253 புள்ளிக ளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், தென்கொரியாவின் யூன்ஜி குவான் 231.2 புள்ளிகளுடன் வெண்க லப் பதக்கத்தையும் வென்றனர். இந்நிலையில், உலக துப்பாக்கி சுடுதல் அரங்கில் தொடச்சியாக சாதனை படைத்து வரும்  தமிழ்நாடு வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு சமூக வலைத்தளங்கள் மட்டும் அனைத்து தரப்பிலும் பாராட்டு குவிந்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவேனில் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

நவம்பர் மாதம் கேரளா வருகிறார் மெஸ்ஸி அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா தேசிய அணியின் கேப்டனுமான மெஸ்ஸி, கேரள மாநிலத்திற்கு வருவது உறுதி செய்யப்பட்டு விட்டதாக செய்திகள் வெளி யாகியுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் கேரளாவில் ஒரு நட்புமுறை போட்டி யில் விளையாடுவதை அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. போட்டி அட்ட வணையில் ஏற்பட்ட சில சிக்கல்களால் அர்ஜெண்டினா அணியின் கேரள சுற்றுப்பயணம் நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில், அனைத்து சிக்கல்க ளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி தலைமையி லான உலக சாம்பியன் அணி (அர்ஜெண்டினா) அக்டோபர் 6 முதல் 14ஆம் தேதி வரை அமெரிக்காவிலும், நவம்பர் 10 முதல் 18ஆம் தேதி வரையில் அங்கோலாவின் (மத்திய ஆப்பிரிக்கா) லுவாண்டா மற்றும் இந்தியாவின் கேரளாவிலும் விளையாடுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.  கேரளாவில் அர்ஜெண்டினா உடன் பலப்பரீட்சை மேற்கொள்ளும் அணி குறித்த விவரம் வெளியாகவில்லை. அதே போல நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி பங்கேற்பாரா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் வெளியிடப் படவில்லை.  ஆனால், டிசம்பர் மாதம் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு மீண்டும் மெஸ்ஸி வர உள்ளதாக மற்றொரு தகவல் கூறப்படுகிறது. அந்த பயணத்தில் கொல்கத்தா, மும்பை, அகமதாபாத் மற்றும் தில்லிக்கு மெஸ்ஸி செல்ல உள்ளதாகவும், பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை அவர் சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் மூலம் மெஸ்ஸி கேரளா வருவது உறுதி என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டை அதிகம் நேசிக்கும் கேரளாவுக்கு நடப்பு உலக சாம்பியன் அர்ஜெண்டினா அணியும், கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸியின் விஜயத்தையும் கால்பந்து ஆர்வலர்கள் சமூக வலை தளங்களில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பி டத்தக்கது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் : இன்று முதல் தொடக்கம்

145ஆவது சீசன் அமெ ரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், விடு முறை நாளான ஞாயிறன்று நியூயார்க் நகரில் தொடங்கு கிறது. செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரின் தகுதி சுற்று ஆட்டங் கள் சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றது. இதனைய டுத்து ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவு ரவுண்ட்ஸ் சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி ஞாயிறன்று இரவு முதல் தொடங்குகின்றன. ரூ.785 கோடி பரிசுத்தொகை அமெரிக்க ஓபன் டென் னிஸ் போட்டிகளில் மொத்தம்

ரூ.785 கோடி பரிசுத்தொகை

(தகுதி சுற்று, ரவுண்ட்ஸ் சுற்றுகளில் வழங்கப்படும் பரி சுத்தொகை சேர்த்து) வழங் கப்படுகிறது. இதில் ஒற்றையர் பிரிவுகளில் மொத்தம் ரூ.275 கோடியும், இரட்டையர் பிரிவுகளில் ரூ.41 கோடியும், கலப்பு இரட்டையர் பிரிவில் ரூ.20 கோடியும், வீல் சேர் பிரி வில் ரூ.13 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படு கிறது.